பொது தேர்வு முடிவுகள் வெளியீடு:


தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.


10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்:


நடப்பாண்டில் 10ம் வகுப்பில், மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 52 ஆயிரத்து 499 பேரும், மாணவிகள் மொத்தம் 4 லட்சத்த 60 ஆயிரத்து 120 பேரும் , மூன்றாம் பாலினத்தவர் 1 நபரும் தேர்வு எழுதினர். 10ம் வகுப்பு தேர்வெழுதியவர்களில்  8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 90.07 சதவீதம் மாணவர்கள் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தற்காலிக சான்றிதழ்:


தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஜீன் 24ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இன்று 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் ஜூன் 24-ஆம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண