ஆன்லைனில் எம்பிஏ படிப்பில் சேர அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது. 


ஆசியாவிலேயே பழமையான கல்வி நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம். சென்னை கிண்டியில் செயல்பட்டுவரும் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி (சிஇஜி) கடந்த 1794-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அவை தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர் கல்வி பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.


பொறியியல் படிப்பிற்கு முக்கியமான பல்கலைக்கழகமான இதன் கீழ் வரும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சுமார் 7.5 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளைப் படித்து வருகின்றனர்.


கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் கற்பித்தல் பாதிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் கற்பித்தல் பணிகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது நிலை சீராகி வருகிறது. இதற்கிடையே பொறியியல் படிப்புகளோடு எம்பிஏ, எம்சிஏ படிப்புகளையும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. 


டான்செட் தேர்வு


தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) எழுத வேண்டும். டான்செட் (TANCET - Tamil Nadu Common Entrance Test) தேர்வெழுதி, தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. 




இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் OEET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் ஆன்லைன் எம்பிஏ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். Business Analaytics மற்றும் Genaral Manangement ஆகிய பிரிவுகளின்கீழ் எம்பிஏ கற்பிக்கப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஆங்கில வழியில் இந்தப் பாடம் கற்பிக்கப்படுகிறது.
 
இதற்கு மாணவர்கள் https://onlinecde.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்து, கட்டணத்தைச் செலுத்த ஆகஸ்ட் 24 கடைசித் தேதி ஆகும். 


தொடர்புக்கு: 044- 22357210/ 7224


கூடுதல் தகவல்களை அறிய: https://onlinecde.annauniv.edu/mod/page/view.php?id=30


*


இதையும் வாசிக்கலாம்:
UGC NET 2022: தொழில்நுட்பப் பிரச்சினையால் நிறுத்தப்பட்ட யுஜிசி நெட் தேர்வு - மறுதேதி அறிவிப்பு


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண