விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பூக்கடைக்காரர் வீட்டை உடைத்து 5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்ககளின் கைவரிசையால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரப்பகுதியில் அமைந்துள்ள தீர்த்த குளம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் தீர்த்தக்குளம் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் திண்டிவனத்தில் பூக்கடை நடத்தி வருகிறார். இவர் புதுச்சேரியில் உறவினர் குடும்ப நிகழ்ச்சிக்காக நேற்று புதுச்சேரிக்கு சென்றுள்ளார். இதனை அறிந்த மர்ம நபர்கள் சிலம்பரசனின் பூட்டிய வீட்டில் கதவை உடைத்து உள்ளே திருட முயற்சி செய்துள்ளனர். சிலம்பரசனின் வீட்டிலிருந்து சத்தம் வந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்றனர்.


அப்பொழுது சிலம்பரசன் வீட்டில் இருந்த மர்ம நபர் ஒருவர் வேகமாக தப்பி ஓடினார். அங்கிருந்தவர்கள் பிடிக்க முயன்ற போது சிக்காமல் தலைமறைவானார். இதை தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் சிலம்பரசனுக்கும், திண்டிவனம் காவல் நிலைய போலீசாருக்கும் தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலம்பரசன் வீட்டில் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்ட அதிலிருந்து 5 பவுன் தங்க நகை மற்றும் ரொக்க பணம் திருடி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்களுடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொள்ளையர்களின் கைவரிசையால் பொதுமக்கள் அச்சத்தில் வசித்து வருகின்றனர்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண