இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் தமிழகத்தில் 5 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலம் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆகிய 5 கல்லூரிகள் ஆயுஷ் படிப்புகளைக் கற்பித்து வருகின்றன. 

Continues below advertisement

ஆயுஷ் படிப்புகள்

நீட் மதிப்பெண் அடிப்படையில்தான் ஆயுஷ் படிப்புகளின் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் (ஆயுஷ் - சித்தா (பிஎஸ்எம்எஸ்), ஆயுர்வேதா (பிஏஎம்எஸ்), யுனானி (பியுஎம்எஸ்), ஓமியோபதி (பிஎச்எம்எஸ்) என்று மத்திய அரசு அறிவித்ததில் இருந்து, நீட் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளை (ஆக.27) கடைசித் தேதி ஆகும்.

Continues below advertisement

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பப் படிவம்‌ மற்றும்‌ தகவல்‌ தொகுப்பேட்டினை https://tnhealth.tn.gov.in/ என்ற சுகாதாரத்‌ துறையின்‌ வலைதள முகவரி மூலமாக பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌.

விண்ணப்பங்கள்‌ இந்த இயக்குநரகத்திலோ, தேர்வுக் குழு அலுவலகத்திலோ வழங்கப்பட மாட்டாது. மேலும்‌, அடிப்படைத் தகுதி, தரவரிசை, கலந்தாய்வு அட்டவணை மற்றும்‌ பிற விவரங்களுக்கு https://tnhealth.tn.gov.in/ என்ற வலைதள முகவரியில்‌ தெரிந்துகொள்ளலாம்‌.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்‌ தபால்‌ / கூரியர்‌ சேவை வாயிலாகப் பெறவோ அல்லது நேரில்‌ சமர்ப்பிக்கவோ கடைசி நாள்‌: 27.08.2024 மாலை 5.30 மணி வரை.

விண்ணப்பதாரர்கள்‌ அரசு ஒதுக்கீட்டு இடங்கள்‌, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள்‌ மற்றும்‌ நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்‌ ஒவ்வொன்றிற்கும் ‌தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்‌.

விண்ணப்பப் படிவங்கள்‌ சமர்ப்பிக்கவேண்டிய முகவரி:

"செயலர்‌, தேர்வுக்குழு,

இந்திய மருத்துவம்‌ மற்றும்‌ ஓமியோபதி இயக்குநரகம்‌,

அறிஞர்‌ அண்ணா அரசு மருத்துவமனை வளாகம்‌,

அரும்பாக்கம்‌, சென்னை - 600 106.

விண்ணப்பிப்பதற்கான தகுதி, வயது உள்ளிட்ட பிற விவரங்களை அறிய https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N24084262.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 

ஆகஸ்ட் 28 கலந்தாய்வு

இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் முதல் ஆயுஷ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. 

கூடுதல் விவரங்களுக்கு:  https://tnhealth.tn.gov.in