தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 5 முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விண்ணப்பிக்கத்‌ தேவையான தகுதிகள்‌


1.  கல்வித்தகுதி:


பொதுப் பிரிவைச்‌ சார்ந்த விண்ணப்பதாரர்கள்‌ மேல்நிலைக் கல்வித்‌ தேர்வில்‌ 50 விழுக்காடு மதிப்பெண்கள்‌ (600/1200 (அ) 300/600) பெற்றிருக்க வேண்டும்‌.


பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ , ஆதிதிராவிடர்‌  ஆதிதிராவிட அருந்ததியர் மற்றும்‌ பழங்குடியினர்‌, மேல்நிலைக் கல்வித்‌ தேர்வில்‌ 45 விழுக்காடு மதிப்பெண்கள்‌ (540/1200 (அ) 270/600) பெற்றிருக்க வேண்டும்‌.


தமிழ்‌ / தெலுங்கு / உருது ஆகியவற்றில்‌ ஏதேனும்‌ ஒன்றைப்‌ பயிற்று மொழியாகக்‌ கொள்ள விரும்பும்‌ மாணவர்கள்‌, அம்மொழியைப்‌ பகுதி ஒன்றிலோ அல்லது பகுதி இரண்டிலோ மொழிப்பாடமாகப்‌ பன்னிரண்டாம்‌ வகுப்புவரை பயின்றிருத்தல்‌ வேண்டும்‌.


ஆங்கில வழியில்‌ பயில விரும்பும்‌ விண்ணப்பதாரர்கள்‌ மேல்நிலைக்கல்வியை (+2 வரை) ஆங்கில வழியில்‌ பயின்றிருக்க வேண்டும்‌.


2. வயது வரம்பு:


விண்ணப்பதாரர்‌ 31.07.2023 அன்று 30 வயதுற்கு மிகாமல்‌ இருத்தல்‌ வேண்டும்‌.


ஆதிதிராவிடர்‌, ஆது திராவிட அருந்ததியர்‌, பழங்குடியினர்‌ மற்றும்‌ மாற்றுத்‌திறனாளிகள்‌ 31.07.2023 அன்று 35 வயதிற்கு மிகாமல்‌ இருத்தல்‌ வேண்டும்‌. ஆதரவற்றோர்‌, கணவனால்‌ கைவிடப்பட்டோர்‌ மற்றும்‌ கைம்பெண்கள்‌) 31.07.2023 அன்று 40 வயதிற்கு மிகாமல்‌ இருத்தல்‌ வேண்டும்‌.


(1) கலப்பினத்‌ தம்பதியரில்‌ பொது, பிற்படுத்தப்பட்டோர்‌, பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்‌ இனம்‌ மற்றும்‌ மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ 31.07.2023 அன்று 32 வயகுற்கு மிகாமலும்‌, ஆதிதிராவிடர்‌, ஆதிதிராவிட அருந்ததியர்‌, பழங்குடியினர்‌ 31.07.2023 அன்று 37 வயதிற்கு மிகாமலும்‌ இருத்தல்‌ வேண்டும்‌.


3. இருப்பிடம்‌:


தமிழகத்தைச்‌ சார்ந்த விண்ணப்பதாரர்கள்‌ மட்டுமே விண்ணப்பிக்கலாம்‌.


‌ 12 மாவட்ட ஆசிரியர்‌ கல்வி மற்றும்‌ பயிற்சி நிறுவனங்கள்‌, 6 ஒன்றிய ஆசிரியர்‌ பயிற்சி நிறுவனங்கள்‌ 8 அரசு ஆசிரியர்‌ பயிற்சி நிறுவனங்களில்‌ மட்டுமே ஆசிரியர்‌ கல்வி பட்டயப்‌ பயிற்சி நடைபெற உள்ளது. அவற்றில்‌ இரு பாலர்‌ பயிலும்‌ பயிற்சி நிறுவனங்களில்‌ 50% இடங்கள்‌ பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.


நிறுவனங்களின்‌ பெயர்களை அறிந்து கொள்ள https://scert.tnschools.gov.in என்ற இணையத்தளத்தைப்‌ பார்க்கவும்‌.


கூடுதல் தகவல்களுக்கு:


 


விண்ணப்பங்களை 05.06.2023 முதல்‌ இணையத்தளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யலாம்‌.


விண்ணப்பக்‌ கட்டணம்‌ ரூ.500.00.


SC/ SCA/ ST / மாற்றுத்திறனாளிகள்‌ பிரிவினருக்கான கட்டணம்‌ ரூ.250.00.


விண்ணப்பங்கள்‌ இணையத்தளத்தில்‌ https://scert.tnschools.gov.in என்ற முகவரியில்‌
05.06.2023 அன்று காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இவ்விணையத்தளத்தில்‌ உரிய
கட்டணத்தை செலுத்தி தங்களது விவரங்களை பதிவேற்றம்‌ செய்யலாம்‌. 


கூடுதல் விவரங்களுக்கு: https://scert.tnschools.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.