2021-ம் ஆண்டுக்கான பிரோபஷனரி ஆபிசர் பணிக்கான  சிறப்பு பயிற்சிக்கான அட்மிட் கார்டை எஸ்பிஐ வெளியிட்டுள்ளது. 

  


எஸ்.பி.ஐ வங்கி 2,056 பிரோபஷனரி ஆபிசர் (பி.ஓ) பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரத்தில்  வெளியிட்டள்து. அதன்படி இந்தப் பணிக்கு அக்டோபர் 5-ஆம் தேதி முதல் 25ஆம் தேதிக்குள் sbi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இப் பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு நிகரான மத்திய அரசின் மூலம் சான்றளிக்கப்பட்ட ஏதேனும் ஓர் படிப்பைப் படித்திருக்க வேண்டும் என்று எஸ்பிஐ தனது ஆட்சேர்ப்பு அறிவிப்பில் தெரிவித்தது.   


தேர்வுக்கு முன்னதாக மாணவர்களின் சமூக நிலைமைக்கேற்ற குறுகிய கால பயிற்சி வகுப்புகளை  எஸ்பிஐ வங்கி நடத்துவது வழக்கம். அதன்படி இந்த பிரோபஷனரி ஆபிசர் பணிக்கு விண்ணப்பிக்கும் பட்டியலின, பழங்குடியின மற்றும் மத சிறுபாண்மையினருக்கு இலவச பயிற்சி வகுப்புகளை எஸ்பிஐ நடத்துகிறது. அதற்கு, விண்ணபத்த மாணவர்கள் https://bank.sbi/web/careers/crpd-po-2021-22-18 என்ற இணையதளத்தில் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



 


   21 வயது முதல் 30 வயதுக்கு உள்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதாவது 2.4.1994 முதல் 1.4.2000 ஆண்டுகளுக்கு இடைபட்டவர்களாக இருக்க வேண்டும். இந்த தேதிக்கு முன்னரோ, பின்னரோ பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அடிப்படை ஊதியமாக மாதம்  27627 ரூபாய் ஊதியம் அளிக்கப்படும். பட்டயக் கணக்காளர்களும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். முதல்கட்டத் தேர்வு 2021 ஆம் ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. அந்தத் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும். முதன்மைத் தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்வு முடிவுகள் ஜனவரி மாதத்தில் வெளியிடப்படும்.


நேர்காணல் பிப்ரவரி முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் நடைபெறும். தேர்வு முடிவுகள் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு sbi.co.in என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம். 


மேலும் முக்கியச் செய்திகள் சில...