வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள மாவட்ட அளவில் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் 24 மணிநேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாவும் பேரிடர் கால உபகரணங்கள் அனைத்தும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகுமார் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நெல்லை மாவட்டத்திலும் தொடர்ந்து 10 நாட்காளக மழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் மழை நீடிப்பதால் அனைத்து தீயணைப்பு நிலையங்களும் பேரிடர் மீட்பு பணிக்கு தயார் நிலையில் இருக்க தீயணைப்புத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட தீயணைப்பு நிலைய அதிகாரி சத்தியகுமார் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் பொருட்டு மாவட்ட அளவில் பேரிடர் காலங்களில் சமாளிக்கும் வகையில் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது, இதுதவிர மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக 25 பேர் கொண்ட கமாண்டோ படையினர் தயார் நிலையில் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையத்திலும் பேரிடர் காலங்களில் பணி புரியக்கூடிய வகையில் தேடுதல் உபகரணங்கள் மீட்பு உபகரணங்கள், கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை உடனடியாக மீட்க சிறப்பு உபகரணங்கள், நீர்நிலை மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை தேட பயன்படக்கூடிய நவீன கேமராக்கள், வெள்ளத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்பதற்கு ரப்பர் படகுகள் மற்றும் அதனுடன் கூடிய இன்ஜின்கள், இரவு காலங்களில் மீட்பு பணி புரிய ஏதுவாக உள்ள செயல் கருவி மற்றும் இரவு நேர ஜெனரேட்டர் உடன் கூடிய மின் விளக்குகள், வெள்ள நீரை வெளியேற்றக்கூடிய பம்புகள், பலதரப்பட்ட மர அறுவை இயந்திரங்கள் அனைத்தும் இயக்கிப் பார்க்கப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கடலூரில் தொடர் மழையால் நகர் பகுதிகளில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் கடும் அவதி
ராமநாதபுரத்தில் கடலுக்கு நடுவே உருவான மணல் திட்டு - சுற்றுலா பயணிகள் காண வனத்துறை ஏற்பாடு
மேலும் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி கரையோர பகுதிகள் , அதிகமான நீர் பிடிப்பு கொண்ட குளங்கள் அருகில் மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். தற்போது சென்னையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு ஏதுவாக நெல்லை மாவட்டத்திலிருந்து அதிவேக ட்ரக் வாகனத்தில் 10 பேர் கொண்ட மீட்பு குழுவை உரிய மீட்பு பணி உபகரணங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
திருச்சி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக 500க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியது