தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களிலும்இலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் தனியார் பள்ளிகள் இலவசக் கல்வியை வழங்கி வருகின்றன.


மத்திய அரசின் இலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ சட்டம்- RTE) சிறுபான்மையினர் பள்ளிகள் அல்லாத, தனியார் சுயநிதிப் பள்ளிகளில் படிக்க சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஆகும் செலவினங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அரசே வழங்கி வருகிறது.


குழந்தைகளின் பெற்றோர் பள்ளி கல்வித்துறையின் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். 


இலவச, கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின்படி சேர்க்கை வழங்கும் தனியார் பள்ளிகளின் விவரங்களைப் பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் காணலாம். இதன்படி, தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களிலும் மொத்தம் 8,239 பள்ளிகள் இந்த இட ஒதுக்கீட்டின்கீழ் இலவச மாணவர் சேர்க்கையை அளிக்கின்றன. 


இதில் குறைந்தபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 63 தனியார் பள்ளிகள், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி இலவச மாணவர் சேர்க்கையை அளிக்கின்றன. அதிகபட்சமாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 540 தனியார் பள்ளிகள், 25 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் இலவச மாணவர் சேர்க்கையை வழங்குகின்றன. சென்னையில் 392 பள்ளிகள்  சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டைத் தங்கள் பள்ளிகளுக்கு வழங்குகின்றன. 


பள்ளிகள் குறித்த முழுமையான விவரத்தைக் காண:  https://rte.tnschools.gov.in/rte-schoollist 


விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு


இந்த நிலையில் 2022-2023-ம் கல்வியாண்டில் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மே 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று (மே 18) வரை விண்ணப்ப அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.


விண்ணப்பிக்கும்போது பெற்றோர்கள், 


* புகைப்படம், 
* பிறப்புச் சான்று அல்லது பிறப்புச் சான்றுக்கான பிற ஆவணம், 
* இருப்பிடச் சான்று, 
* வருமானச் சான்று (ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குக் கீழ் உள்ளோர் மட்டும்), 
* வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரில் முன்னுரிமை கோரும் நபர்கள் உரிய அலுவலரிடம் பெற்ற நிரந்தர ஆவணங்களின் நகல், 
* ஜாதிச் சான்று 


ஆகியவற்றைப் பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.


மேலும் வாசிக்க: TN RTE Admission: தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு மே 25 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி? 


கூடுதல் விவரங்களுக்கு: https://rte.tnschools.gov.in/moredetails


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண