பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்ட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின்  முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள், உதவித் திட்ட அலுவலர்கள் (CEO, DEO & APO) ஆகியோருக்கான மாவட்ட வாரியான ஆய்வுக் கூட்டம் 23.06.2025 & 24.06.2025 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெறுகிறது! இந்த ஆய்வுக் கூட்டம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகக் கூட்ட அரங்கில் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது .

 என்னென்ன விதிமுறைகள்?

 இக்கூட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் பணியாற்றும் அலுவலர்கள் ( முதன்மைக்கல்வி அலுவலர் , மாவட்டக்கல்வி அலுவலர்கள் ( இடைநிலை) , ( தொடக்கக் கல்வி ) , ( தனியார் பள்ளிகள் ) மற்றும் உதவித் திட்ட அலுவலர் ஆகியோர் கலந்துகொள்ள வேண்டும் . ஒவ்வொரு மாவட்டமாக அழைக்கப்பட்டு மாவட்ட நிலவரம் ஆய்வுசெய்யப்பட உள்ளது.

இக்கூட்டத்தில் மாவட்ட அலுவலர்கள் கலந்துகொள்ளும்போது அந்தந்த மாவட்டத்திற்குரிய கண்காணிப்பு அலுவலர் மற்றும் அனைத்து இயக்குநர்கள் , இணைஇயக்குநர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பள்ளிக்கல்வி இயக்குநருக்கும் , தொடக்கக்கல்வி இயக்குநருக்கும் , தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

என்ன தேதிகளில் எந்தெந்த மாவட்டங்களுக்கு ஆய்வு?

அதன்படி கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு ஜூன் 23-ம் தேதி காலையும், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், மதுரை, ஈரோடு, திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு மதியமும் ஆய்வுக் கூட்டம் நடைபெறும்.

அதேபோல், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, கரூர், நாமக்கல், வேலூர், சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு ஜூன் 24-ம் தேதி கூட்டம் நடத்தப்பட உள்ளது.

நலத் திட்டங்கள் கண்காணிப்பு

தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் பல்வேறு மாணவர் நலத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், இந்தத் திட்டங்கள் அனைத்தும் பள்ளி மாணவர்களுக்கு முறையாக, முழுமையாகச் சென்று சேர்வதை உறுதி செய்ய, அவ்வப்போது துறை சார் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.