Hyundai Exter SUV: இந்திய ஆட்டோமொபைல் தரமான காம்பேக் எஸ்யுவிக்களில் ஒன்றான, ஹுண்டாயின் எக்ஸ்டெர் கார் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

போட்டித்தன்மை மிக்க காம்பேக்ட் எஸ்யுவி

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யுவி கார்களின் மீதான மோகம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதிலும் எண்ட்ரி லெவல் அதாவது காம்பேக்ட் எஸ்யுவிக்களில் தான் விற்பனை கொடிகட்டுகிறது. காரணம் குறைந்த விலை, அதிகப்படியான அம்சங்கள், அட்டகாசமான டிசைன் மற்றும் தனித்துவமான தோற்றம் காரணமாக காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் கார் உற்பத்தியாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், இந்திய சந்தையில் ரூ.7 லட்சம் பட்ஜெட்டில் அம்சங்கள், மைலேஜ் என பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் ஹுண்டாயின் எக்ஸ்டெர் கார் மாடல் குறித்து இந்த தொகுப்பில் விவரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: Scooters: லைசென்ஸ் வேண்டாம், ஃபைன் போட நோ சேன்ஸ் - தாரளமாய் ஓட்டக்கூடிய 5 ஸ்கூட்டர்கள் - பட்ஜெட்டில்

ஹுண்டாய் எக்ஸ்டெர்:

காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் டாடா பஞ்ச், நிசான் மேக்னைட்/கைகர் கார் மாடல்களுக்கு அடுத்தபடியாக, மலிவு விலையில் கிடைக்கும் கார் ஹுண்டாய் எக்ஸ்டெர் ஆகும். ஆட்டோகார் தளத்தின் விவரங்களின்படி, இதன் விலை ரூ.6.00 லட்சம் தொடங்கி ரூ.10.15 லட்சம் (எக்ஸ் ஷோ-ரூம்) வரை நீள்கிறது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷன் மற்றும் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் என மொத்தம் 17 வேரியண்ட்களில் எக்ஸ்டெர் கார் மாடல் விற்பனை செய்யப்படுகிறது. அட்லய் ஒயிட், ஃபியரி ரெட், ரேஞ்சர் காகி மற்றும் ஸ்டார்ரி நைட் என, சிங்கிள் மற்றும் டூயல் டோன் உட்பட 12 வண்ண விருப்பங்களில் விற்பனை செய்யப்படுகிறது. 

ஹுண்டாய் எக்ஸ்டெர் பெஸ்ட் காம்பேக்ட் எஸ்யுவி ஏன்?

நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏதுவான அளவு, ஏராளமான அம்சங்கள், போட்டித்தன்மை மிக்க விலை ஆகியவற்றால், காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் ஹுண்டாய் எக்ஸ்டெர் வலுவான போட்டியாளராக உள்ளது. ஸ்டைல், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களின் கலவையால் மதிப்பு மற்றும் நடைமுறைத்தன்மைக்கு ஏதுவான தேர்வாக எக்ஸ்டெர் விளங்குகிறது. சிறிய அளவு காரணமாக போக்குவரத்து நெரிசல் மிக்க நகர்ப்புறங்களில், இந்த காரை கையாளவது மிகவும் எளிதானதாக உள்ளது. 

பஞ்ச்சை காட்டிலும் பெஸ்ட் எப்படி?

மலிவு விலையில் தொடர்ந்து விற்பனையில் ஆதிக்கம் செலுத்தும் பஞ்ச்சை காட்டிலும் எக்ஸ்டெர் சிறந்தது என கூறுவதற்கு சில காரணங்கள் உண்டு. அதில், செயல்திறன், அம்சங்கள் மற்றும் நடைமுறைக்கு உகந்தது ஆகியவை அடங்கும். இரண்டுமே திறன்மிகுந்த மைக்ரோ-SUVகள் என்றாலும், மென்மையான, அதிக சக்திவாய்ந்த நான்கு சிலிண்டர் இன்ஜின் மற்றும் நவீன அம்சங்கள் நிரம்பி இருப்பது எக்ஸ்டெர் கார் மாடலை மேம்படுத்தி காட்டுகிறது.

எக்ஸ்டெர் - இன்ஜின் விவரங்கள்:

எக்ஸ்டெர் கார் மாடலானது 1.2 லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு பவர் ட்ரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.  ஃப்ரண்ட் வீல் ட்ரைவில் பெட்ரோல் எடிஷன் 82bhp மற்றும் 113.8Nm ஆற்றலையும், சிஎன்ஜி எடிஷன் 68bhp மற்றும் 95.2Nm ஆற்றலையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. பெட்ரோல் எடிஷன் லிட்டருக்கு சராசரியாக 19.3 கிலோ மீட்டர் மைலேஜும், சிஎன்ஜி எடிஷன் கிலோவிற்கு சராசரியாக 27.1 கிலோ மீட்டர் மைலேஜும் வழங்கும் என ஹுண்டாய் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்டெர் - உட்புற வசதிகள்

எக்ஸ்டெர் மாடல் 5 பேர் அமரும் வகையில் தாராளமான இடவசதியை கொண்டுள்ளது. 8 இன்ச் எச்டி இன்ஃபோடெயின்மெண்ட்  சிஸ்டம், அட்வான்ஸ்ட் டிஜிட்டல் கிளஸ்டர், மல்டி லேங்குவேஜ் UI சப்போர்ட், வாய்ஸ் எனேபிள்ட் சன்ரூஃப், டூயல் கேமரா டேஷ்கேம், வயர்லெஸ் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்ஸ், ஸ்டியரிங் மவுண்டட் கண்ட்ரோல்ஸ் உள்ளிட்ட, இந்த விலையிலான காரில் இடம்பெற்று இருப்பது மிகவும் அரிதாகும்.

பாதுகாப்பு அம்சங்கள்:

தென்கொரிய நிறுவனத்தின் எக்ஸ்டெர் காரில், வெஹைகிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், 6 ஏர்பேக்குகள், குழந்தைகளுக்கான ISOFIX Mounts இருக்கைகள், 3 பாயிண்ட் சீட்பெல்ட்ஸ், அனைத்து இருக்கைகளுக்கும் சீட் பெல்ட் ரிமைண்டர், ரியர் பார்கிங் சென்சார்ஸ், EBD உடன் கூடிய ABS, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. டாப் எண்ட் வேரியண்ட்களில், டயர் ப்ரெஷர் மானிட்டரிங்  சிஸ்டம், ரியர் கேமரா உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. 

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா பஞ்ச், மாருதி ஃப்ரான்க்ஸ், ரெனால்ட் கைகர் மற்றும் நிசான் மேக்னை ஆகிய கார் மாடல்களுடன் போட்டியிடுகிறது. இருப்பினும் பல்வேறு அம்சங்கள் மற்றும் ரூ.6 லட்சம் என்ற பட்ஜெட்டை கருத்தில் கொண்டால், எக்ஸ்டெர் கார் சிறந்த காம்பேக்ட் எஸ்யுவி தேர்வாக இருக்கும்.


Car loan Information:

Calculate Car Loan EMI