இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உலா வருபவர் ராஷ்மிகா மந்தனா. விஜய், அல்லு அர்ஜுன், ரன்பீர் கபூர் என இந்தியாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது, தனுஷ் - நாகர்ஜுனா நடிக்கும் குபேரா படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தனுஷ் அனைத்தும் செய்பவர்:
குபேரா படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் நேற்று பேசிய ராஷ்மிகா மந்தனாவிடம், எந்தெந்த பிரபலங்களிடம் இருந்து எந்த தகுதியை நீங்கள் எடுத்துக்கொள்ள ஆசைப்படுவீர்கள்? என்று தொகுப்பாளர் கேட்டார். முதலில், நாகர்ஜுனாவிடம் இருந்து என்ன தகுதியை எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. நாகர்ஜுனாவின் வசீகரம், அவரது ஆராவை எடுத்துக்கொள்வேன் என்றார்.
பின்னர், தனுஷிடம் இருந்து என்ன எடுத்துக்கொள்வீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, அவர் என்ன வேண்டுமானாலும் செய்யும் திறமை படைத்தவர். பாடுவார், ஆடுவார், இசையமைப்பார், அனைத்தும் செய்வார் என்றார்.
விஜய் தேவரகொண்டாவிடம் உள்ள எல்லாம் வேண்டும்:
அல்லு அர்ஜுனிடம் இருந்து என்ன தகுதி வேண்டும்? என்று கேட்கப்பட்டபோது, அவரின் ஸ்வாக் என்றார். பின்னர், விஜய் தேவரகொண்டாவிடம் இருந்து என்ன எடுத்துக்கொள்வீர்கள்? என்று தொகுப்பாளர் கேட்டார். அதற்கு பதிலளித்த ராஷ்மிகா மந்தனா, சிரித்துக்கொண்டே அனைத்தும் என்று பதிலளித்தார்.
ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் கடந்த 2018ம் ஆண்டு முதன்முறையாக கீதகோவிந்தம் படத்தில் இணைந்து நடித்தனர். இந்த ஜோடி இளைஞர்கள் பலராலும் கொண்டாடப்பட்டது. பின்னர். டியர் காம்ரேட் படத்திலும் இணைந்து நடித்தனர். கீத கோவிந்தம் படம் முதலே இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியது.
விரைவில் திருமணம்:
பின்னர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக ராஷ்மிகா மந்தனா கூறினார். இவர்கள் திருமணம் எப்போது? என்பது குறித்து எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. இருவரும் தற்போது தங்களது படங்களில் மும்முரமாக நடித்து வருகின்றனர். 36 வயதான விஜய் தேவரகொண்டாவிற்கும், 29 வயதான ராஷ்மிகா மந்தனாவிற்கும் திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, விஜய் தேவரகொண்டா தெலுங்கில் முன்னணி நடிகராக உலா வரும் நிலையில், ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், ராஷ்மிகா மந்தனா இந்தியில் தமா, காக்டெயில் 2 ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.