இந்திய ரயில்வேத் துறையின் ஏழாம் மற்றும் இறுதி கட்டத் தேர்வு ஜூலை 23ம் தேதி முதல் ஜூலை31ம் தேதி வரை நடக்க இருப்பதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
இந்திய ரயில்வே, தனது 21 ரயில்வே வாரியங்கள் மூலம் நடத்தும் மிகப் பெரிய அளவிலான ஆட்கள் தேர்வு, டிசம்பர் 15ம் தேதி முதல் தொடங்கியது. தொழில்நுட்பம் சாராத பிரபல பிரிவுகளில் (non technical popular categories) 35,208 காலியிடங்களும், தனித்த மற்றும் அமைச்சு பிரிவுகளில் (Isolated & Ministerial categories) 1663 பணியிடங்களும், 103769 நிலை 1 (Level 1 vacancies) என 1.4 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு 2.44 கோடிக்கும் மேற்பட்டோர் நாடு முழுவதும் தேர்வெழுதவுள்ளனர்.
CEN-01/2019 - Notice on 7th and last Phase of the Exam, schedule for CBT-1 (NTPC Graduate & Under Graduate Posts)
ஏழாம் மற்றும் இறுதி கட்டத் தேர்வில் 2. 78 லட்ச மாணவர்கள் நாடு முழுவதும் தேர்வெழுதவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் எந்தத் தேதியில் ஆட்தேர்வுக்கு வரவேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்கள் தேர்வு அனுமதிச் சீட்டில் தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களது அனுமதிச் சீட்டினை அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து 20 ஜூலைக்குப் பிறகு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். .இது குறித்த தகவல்கள் விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக இ-மெயில், எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்படும். தகவல்கள் ரயில்வே தேர்வு வாரிய இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. அட்மிர் கார்ட் வேறெந்த முறையிலாவது, அதாவது தபால், கூரியர், பதிவுத் தபால்,போன்றவை மூலமாக அனுப்பப்பட மாட்டாது.
ஆட்சேர்ப்புப் பணி முழுவதும் இணையதளம் மூலம், நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்பட உள்ளது. கடின உழைப்பு மற்றும் தகுதியின் மூலம் மட்டுமே ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. கைக்கடிகாரம், புத்தகங்கள், காகிதங்கள், பத்திரிகைகள், செல்பேசி, புளு டூத், ஹெட்போன், கால்குலேட்டர் போன்ற மின்னணு சாதனங்கள் தேர்வுக் கூடத்திற்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டாது என ரயில்வே வாரியம் தெரிவித்தது.
மேலும், தேர்வர்களுக்கு வினாத்தாள்கள் இந்தி, ஆங்கிலம், உருது, அஸ்ஸாமி, வங்காளம், குஜராத்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு ஆகிய 15 மொழிகளில் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் முன்னதாக தெரிவித்திருந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்