இந்தியாவில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராவது என்பது மிக கடினமான முயற்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் சிவில் சர்வீசஸ் தேர்வை நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் எழுதும் நிலையில் அதில் குறைந்த அளவிளான நபர்களே வெற்றி பெற்றுவருகின்றனர். சிவில் சர்வீஸ் தேர்வை எழுதுவதற்காக முதல் முயற்சியில் காட்டும் ஆர்வத்தை, தோல்விகளுக்கு பிறகு பலர் காட்டுவதில்லை. சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகும் பலர் தொடர் தோல்விகளுக்கு பிறகே வெற்றி இலக்கை அடைந்துள்ளனர்.  


தற்போது இந்திய வெளியுறவுப்பணியில் பயிற்சி அதிகாரியாக டெல்லியில் பணிபுரிந்து வரும் பூஜ்யா பிரியதர்ஷினி, யுபிஎஸ்சி தேர்வின் தொடர்சியான தோல்விகளுக்கு பின் மனமுடைந்ததால் அதற்கான தயாரிப்புகளில் இருந்து விலக நினைத்தார், ஆனால் அவரது குடும்பத்தினரின் தொடர் ஆதரவு பூஜ்யா பிரியதர்ஷினிக்கு நம்பிக்கையை கொடுத்தது. இந்த நம்பிக்கயுடன் 2018ஆம் ஆண்டில் எழுதிய யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய தரவரிசையில்  11 ஆவது இடத்தை பெற்றார்.


டெல்லியில் பி.காம் படிப்பை முடித்த பூஜ்யா பிரியதர்ஷினி, நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழந்கத்தில் பொதுநிர்வாகத்தில் முதுகலை முடித்த பின்னர் டெல்லியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் 2 ஆண்டுகள் வேலை செய்தார். தனது பணிகளுக்கு மத்தியிலேயே தொடர்ந்து யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்த பூஜ்யா பிரியதர்ஷினி, கடந்த 2013ஆம் ஆண்டு முதன்முறையாக யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை முதல்முறையாக எழுதினார்.



பூஜ்யா பிரியதர்ஷினி யுபிஎஸ்சி தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே தோல்வியடைந்தார். இருப்பினும் மூன்று வருட இடைவெளிக்கு பின்னர் 2016ஆம் ஆண்டில் தனது இரண்டாவது முயற்சியில் நேர்காணல் சுற்று வரை வந்த பூஜ்யாவால் தேர்ச்சி பெற முடியவில்லை. இருப்பினும் மனம் தளராமல் 2017ஆம் ஆண்டில் நடந்த யுபிஎஸ்சி தேர்வை எழுதிய பூஜ்யா அதிலும் தோல்வியுற்றதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால்  யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராவதை நிறுத்துவது என முடிவெடுத்தார்.


இந்த கடினமான நேரத்தில் தன்னுடைய குடும்பத்தினர் தன்னை பெரிதும் ஆதரித்ததாக கூறும் பூஜ்யா பிரியதர்ஷினி, குடும்பத்தினரின் ஆதரவு மீண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வை எதிர்கொள்வதற்கு உண்டான நம்பிக்கையை அளித்ததாக கூறுகிறார், சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாரான போது, மாதிரி நேர்காணல்கள் மூலம் கேள்விகளை எதிர்கொண்டு பதட்டமின்றி பதிலளிப்பதற்கான பயிற்சியை எடுத்தநிலையில் 2016ஆம் ஆண்டில் எழுதிய தேர்வில் அகில இந்திய அளவில் 11ஆவது இடத்தை பிடித்து பூஜ்யா வெற்றி பெற்றார்.


சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் நபர்கள் கடுமையாக உழைத்தாளும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தும் பிரியதர்ஷினி, யுபிஎஸ்சி தேர்வில் தோல்வியடைந்திருந்தாலும் பீதி அடையத் தேவையில்லை என்கிறார். தவறுகளை பட்டியலிட்டு அதனை சரிசெய்து முயற்சித்தால் நிச்சயமாக சிவில்சர்வீஸ் தேர்வை வெல்லமுடியும் என்பது பூஜ்யா பிரியதர்ஷினியின் கருத்தாக உள்ளது.