புதுச்சேரி: புதுச்சேரி பள்ளிகளில் இனி அட்டெண்டன்ஸ் நோட்டு கிடையாது. ஆன்லைன் மூலம் வருகைப் பதிவு  33   செய்ய புதிய மொபைல் செயலியை கல்வித்துறை அறிமுகம் செய்தது.
 

புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மற்றும் ஆசிரியர் வருகை நோட்டு புத்தகத்தின் வழியே பதிவு செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல் புதுச்சேரியின் அரசு அனைத்து அரசு பள்ளிகளும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் மையம் காரணமாக காகிதம் இல்லா நடமுறைக்கு புதுச்சேரியின் ஒவ்வொரு துறைகளும் கொண்டுவரப்பட்டு வருகிறது. 

 

அந்த வகையில் கல்வித்துறையில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக கல்வித்துறையின் சமக்ரா சிக்ஷா மாநிலத் திட்ட இயக்குனர் தினகரன் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் மாணவர்களின் வருகை மற்றும் ஆசிரியர் வருகை இனி ஆன்லைன் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும் இதற்கான புதிய மொபைல் செயலி அனுப்பியுள்ளார்.

 

http://pudupallikalvi.py.gov.in என்ற இணைப்பில் சென்று "PYSCHOOLS"என்ற ஆண்ட்ராய்டு மொபைல் செய்யும் மூலம் வருகை குறிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதற்கான செய்முறை வீடியோக்கள் https://drive.google.com/drive/folders/IKQGIvJ3SmglJqc86Q_iHKavtxpBGcFK என்ற இணைப்பில் பார்க்க கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது.