தைப்பூசத் திருநாளை முன்னிட்டு அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய முருகப் பெருமானுக்கு வேத மந்திரங்கள் முழங்கி தமிழில் திருமுறை பாடல்கள் பாடி நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று அரோகரா கோஷங்கள் முழங்கி வழிபாடு செய்தனர்.




தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வராக நதி ஆற்றங்கரையோரத்தில் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட கோவில் சோழப் பேரரசின் வாரிசான ராஜேந்திர சோழீஸ்வரரால் கட்டி முடிக்கப்பட்டது. அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இக்கோவில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலில் மூலவரான பாலசுப்பிரமணியம் உற்சவராக முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்து அருள் பாலிப்பது இக்கோவிலில் சிறப்பம்சமாகும்.


TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?




இன்று முருகனின் அறுபடை வீடுகள் அனைத்திலும் தைப்பூசத் திருநாள் பெருவிழா பக்தர்களின் அரோகரா கோஷங்கள் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில், பெரியகுளத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவிலிலும் அதிகாலை முதலே தைத்திருநாளை முன்னிட்டு பக்தர்கள் கோவிலில் கூடி சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.


Modi in France: பிரான்ஸில் கடும் குளிரில் வரவேற்ற இந்தியர்கள்.. மேக்ரானுடன் விருந்து... அசத்தும் மோடி...




முன்னதாக மூலவரான பாலசுப்ரமணியனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய உற்சவர் சிலைக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்கி தமிழில் திருமுறை பாடல்கள் பாடி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷங்கள் முழங்கி தைப்பூசத் திருநாளில் எழுந்தருளிய முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டுச் சென்றனர்.




அதேபோல் போடி நாயக்கனூரில் பிரசித்திபெற்ற முருகன் கோவிலிலும் இன்று அதிகாலை 5 மணிமுதலே பக்தர்கள் சாமி தரிசன் செய்தனர். ஆண்டிபட்டி மலையடிவாரத்தில் உள்ள முருகன் கோவில், கம்பம் அருகே காயகவுண்டன்பட்டி வனப்பகுதிக்குள் வீற்றிருக்கும் சண்முக நாதர் திருக்கோவிலில் இன்று அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக தமிழக, எல்லையான கம்பத்திலிருந்து  கூடலூர் சென்று குமுளி மலை வழிச்சாலையாக செல்லும் போது வழியில் உள்ள வழிவிடு முருகன் கோவிலில் இன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கம்பம், கூடலூர் மட்டுமல்லாமல் கேரள மாநில குமுளி பகுதிகளிலிருந்து வந்த கேரள மக்களும் ராஜ அலங்காரத்தில் வீற்றிருந்த முருக பெருமானை வழிபட்டு சென்றனர்.


Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!


வழிவிடு முருகன் கோவிலிலிருந்து கேரள மாநிலம் குமுளி செல்லும் சாலையில் பக்தர்கள் பல்வேறு இடங்களில் அண்ணதானம் வழங்கினர். இன்று அதிகாலை 5 மணி முதல் தொடங்கிய பூஜை மதியம் 1 மணி வரையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதிகமாக கூடிய பக்தர்களின் கூட்ட நெரிசலால் தமிழக, கேரள எல்லையை இணைக்கும் முக்கிய சாலையான் குமுளி மலைவழிச்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.