ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட 26 வகையான சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. அதில் வெற்றிபெற்றவர்கள் அடுத்தகட்டமாக நடைபெறும் முதன்மைத் தேர்வுக்கு தகுதியானவர்களாக கருதப்படுவர்.இந்த தேர்வானது கடந்த ஜனவரி மாதம் 10 ம் தேதி நடைபெற்றது. 


இந்தநிலையில், மீண்டும் குடிமை பணிகளுக்கான (ஐ.ஏ,எஸ்., ஐ.பி,எஸ்) முதல் நிலை தேர்வு 23.01.2022 (ஞாயிற்றுக் கிழமை) தமிழகத்தில் 18 மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்தநிலையில், கொரோனா பரவல் காரணமாக குடிமை பணிகளுக்கான (ஐ.ஏ,எஸ்., ஐ.பி,எஸ்) முதல் நிலை தேர்வு தேதி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கையில்,


தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம், சென்னை மற்றும் அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி நிலையங்கள்,கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய பயிற்சி மையங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்பட்டதாரிகள் மற்றும் முதுநிலைபட்டதாரிகள் ஆகியோருக்கு, மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வு ஜூன் 2022 ஆம் ஆண்டிற்கு கட்டணமில்லாப் பயிற்சி அளிப்பதற்கு நுழைவுத்தேர்வு 23.01.2022 அன்று நடைபெறவிருந்தது அதன்படி தமிழ்நாட்டை சார்ந்த ஆர்வலர்களிடமிருந்து இணையதளம் மூலமாக 8704 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 


மேற்கண்ட நுழைவுத்தேர்வானது 23.01.2022 (ஞாயிற்றுக் கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் தமிழகத்தில் 18 மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் காரணமாக தமிழக அரசு மாநிலம் முழுவதும் 31.01.2022 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஆர்வலர்களின் நலன்கருதி இப்பயிற்சி மையத்தால் 23.01.2022 அன்று நடைபெற இருந்த முதல்நிலைத் தேர்வு பயிற்சி வகுப்பிற்கான நுழைவுத் தேர்வானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.


தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், அவ்வப்போது அறிவிக்கப்படும் விவரங்களை அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com மற்றும் தொலைபேசி 044-24621475 வாயிலாக ஆர்வலர்கள் அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


மேலும் படிக்க : 2 கேரள பெண்களுடன் மசாஜ் செண்டரில் பாலியல் தொழில் - 3 பேரை கைது செய்த கொடைக்கானல் போலீஸ்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


UP Election 2022: : உ.பி.யில் உணவுத்துறை அமைச்சரும் ராஜினாமா...! அகிலேஷ் யாதவுடன் சந்திப்பு..! ஆட்டம் காணும் பா.ஜ.க...!


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண