கொடைக்கானலில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் செய்த மூவர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் டிப்போ பகுதியில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் உள்ளது. இங்கு பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு கொடைக்கானல் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது மசாஜ் சென்டரில் சோதனை நடத்திய போலீசார் அங்கு பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், ஜனகராஜ், மதுரையைச் சேர்ந்த சரண், ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதை தொடர்ந்து அந்த மசாஜ் சென்டரில் இருந்த கேரளாவைச் சேர்ந்த இரண்டு பெண்களை மீட்ட காவல்துறையினர் அவர்களை காப்பகத்திற்கு அனுப்பினர்.

 



துப்பாக்கிச்சூடு பயிற்சி மையத்தை சுற்றி உரிய உயரமான காங்கிரீட் சுற்றுச்சுவர் அமைக்க கோரிய வழக்கு - தமிழக உள்துறை செயலர்  பதில் தர உத்தரவு









விருருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ராமசுப்பு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " தேசிய நெடுஞ்சாலை எண் 744, மதுரையிலிருந்து கொல்லம் பகுதியை திருமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வழியாக இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு அருகே உள்ள பூவந்தியில் உள்ள விழுப்பனூர் கிராமத்தில் தமிழ்நாடு காவல் துறைக்கு சொந்தமான துப்பாக்கிச்சூடு பயிற்சிபெறும் தளம் உள்ளது. இத்தளத்தை சுற்றி சாம்பல் நிற அணில்கள் சரணாலயம், தேசிய நெடுஞ்சாலை மற்றும் குடியிருப்புப் பகுதிகளும் அமைந்துள்ளன.




இப்பயிற்சி நிலையத்தைச் சுற்றி மக்கள் நடமாட்டமும் அதிகம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள், பேருந்துகள், லாரிகள், வேன், கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் அதிகம் பேர் பயணித்து வருகின்றனர். துப்பாக்கியிலிருந்து வெளிவரும் புல்லட்டுகள் குறைந்தபட்சம் 600 மீட்டர் தொலைவுக்கு செல்லும். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர், பூவந்தி கிராமத்தில் அமைந்துள்ள காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு பயிற்சி மையத்தை சுற்றி சுற்றுச்சுவர் இல்லை. ஆகவே விரும்பத்தகாத அசம்பாவிதங்கள் நிகழ்வதற்கு முன்பாக, துப்பாக்கிச் சுடும் பயிற்சிக் களத்தை  சுற்றி உரிய உயரமான காங்கிரீட் சுற்றுச்சுவர் அமைக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு வழக்கு குறித்து தமிழக உள்துறை செயலர், தமிழக காவல்துறை தலைவர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.