புதுவைப் பல்கலைக்கழகத்தில் 2024-25-ம் கல்வியாண்டில் சேர்ந்து படிப்பதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய பல்கலைக்கழங்களில் மாணவர் சேர்க்கை CUET நுழைவுத் தேர்வு மூலமே நிரப்பப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, புதுவைப் பல்கலைக்கழத்திலும் இந்த கல்வியாண்டிற்கான மணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதுகலை மற்றும் டிப்ளோ படிப்புகளில் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியுடைய மாணவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,” முதுகலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 26.05.2024 ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளது.
படிப்புகளின் விவரம்
- M.A./M.Sc./M.Com./MCA/M.Tech./MBA/
- M.Lib.I.Sc. (Master of Library and Information Science) /
- M.Ed. / M.P.Ed./ MSW (Master of Social Work) / MPA (Theatre Arts) / LLM (2 Years)
- P.G. Diploma in Criminology & Forensic Science / Intellectual Property Rights
இந்த நிலையில் 2024-25 கல்வியாண்டில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள் தங்களது பெயர், முகவரி, படிக்க விரும்பும் பாடம் குறித்த விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகள், வழங்கப்படும் பாடப் பிரிவுகள், கல்வித் தகுதிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களை பல்கலைக்கழக இணையத்தளத்தில் WWW.pondiuni.edu.in தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்ப கட்டணம்
இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மே மாதம் 17ம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது 26-ம்ட தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 26.05.2024
படிப்பு குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ள - https://www.pondiuni.edu.in/admissions-2024-25/
விண்ணப்பிக்க - https://www.pondiuni.edu.in/admissions-2024-25/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.