புதுச்சேரி மத்தியப் பல்கலைக் கழகத்தின் தற்காலிகப் பதிவாளராகப் பணியாற்றியவர் பேராசிரியராகப் பணிபுரியாத சூழலில் சமுதாயக் கல்லூரி முதல்வராக நியமித்ததற்கு எதிர்ப்புக் கிளம்பியதால் அவரை இணை பதிவாளராகப் புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் மாற்றியுள்ளது. புதுச்சேரி மத்தியப் பல்கலைக் கழகம் தரவரிசை மோசமாகச் சரிந்துள்ளதற்கு பதிவாளர், நிதி அதிகாரி மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர், நூலகர் உட்பட 28 முக்கியப் பணியிடங்களை பல ஆண்டுகளாக நிரப்பாதது தான் காரணம் என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் புதுச்சேரி பல்கலைக்கழக ஆசிரியர் அல்லாத ஊழியர் நலச் சங்கத்தினர் மனுத்தாக்கல் செய்தனர். நவம்பருக்குள் முக்கியப் பொறுப்புகளை நிரப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


H Raja: கைதாகிறாரா ஹெச்.ராஜா! அப்படி என்ன தான் பேசினார்? டீட்டெய்ல்ட் ரிப்போர்ட்


இந்த நிலையில் தற்காலிகப் பதிவாளராக இருந்த சித்ராவை, பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரி முதல்வராக நியமித்துள்ளதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. ஏனெனில் இவர் பேராசிரியராகப் பணிபுரியாமல் கல்லூரி முதல்வராக முடியாது என்று குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குர்மீத் சிங்கிடம் மனுவும் தரப்பட்டது. இது யுஜிசி விதிகளுக்கு எதிரானது எனக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. உயர் கல்வி நிறுவனங்களில் அவர் 15 ஆண்டுகள் கற்பிக்கும் பணியில் ஈடுபடவில்லை என்று ஆதாரத்துடன் குறிப்பிட்டனர்.


Operation T23: டி23 புலியை பார்த்தும் - மயக்க ஊசி செலுத்த முடியாதது ஏன்?



இந்த நிலையில் பல்கலைக் கழகப் பொறுப்பு பதிவாளர் பிறப்பித்துள்ள உத்தரவில், புதுச்சேரி சமுதாயக் கல்லூரி முதல்வர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள சித்ராவின் பணியானது இனி இணை பதிவாளராகவே இருக்கும். அதே நேரத்தில் சமுதாயக் கல்லூரி ஆலோசகராகவும் அவர் கூடுதலாகச் செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார்.


China Power Shortage: இருளில் மூழ்கிய சீனா... அச்சத்தில் சீனர்கள்


இது பற்றிப் புகார் தெரித்துள்ள சங்கங்கள் தரப்பில் கூறுகையில், சமுதாயக் கல்லூரியில் பொறுப்பு முதல்வராக, பேராசிரியராகப் பணிபுரியாத சித்ரா அப்பொறுப்பில் இருந்து முழுமையாக விடு விக்கப் படவில்லை. தகுதியில்லா அவர் தொடரக் கூடாது. யுஜிசியில் 10 ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டு இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 110 ஆராய்ச்சி மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். அதே போல் தகுதி உடையவரை சமுதாயக் கல்லூரி முதல்வராக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்கலைக் கழகத்தைக் காக்க நீதி மன்றத்தில் தொடர்ந்து முறையிடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.


MK Stalin: வெளிநாட்டில் உள்ள தமிழர்களுக்கும் திட்டம்.. ஸ்டாலின் அதிரடி!


Bagheera : பிரபுதேவா ஒரு மின்சாரம் - புகழ்ந்து தள்ளிய தாணு