பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலம் அறியப்பட்ட பிரபல வடிவமைப்பாளர் ரோஹித் வர்மா. இவர் தனது சமீபத்திய போட்டியில், தனது மாமாவினால் பாலியல் வன்கொடுமையை எதிர்கொண்டது குறித்து மனம் திறந்து தெரிவித்துள்ளார்.


மேலும் அந்த நேர்காணலில், வடிவமைப்பாளர் ரோகித் வர்மா தனது குழந்தைப் பருவத்தில் தனது மாமாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைச் சொல்லும்போது, சில அதிர்ச்சியூட்டும் தகவல்களையும் பேசியுள்ளார். அப்போது, ரோஹித் வர்மா தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பணத்திற்காக பாலியல் தொழிலாளியாக வேலை செய்து வந்ததைப் பற்றியும் கூறினார். குறிப்பாக, தனக்கு எட்டு வயதாக இருந்தபோது தனது மாமா 'பாலியல் வன்கொடுமை' செய்ததை அவர் கூறினார்.


வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் சித்தார்த் கானுடன் பேசிய ரோஹித் வர்மா, “நான் ஒரு நல்ல குடும்பத்தை சேர்ந்தவன். ஆனால் எனது குடும்ப உறுப்பினர்கள் மிகவும் பழமையான சிந்தனை கொண்டவர்கள். நான் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தாலும், என் சொந்த மாமாவால் என் குழந்தை பருவத்தில் நான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். நான் எட்டு வயதில் என் சொந்த மாமாவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன். என்னை புடவை உடுத்தி, என் உடம்பில் சூடான மெழுகு பூசி, மேலும் கொடூரமான அத்துமீறல்களை செய்து வந்தார். இவை அனைத்தும் மூன்று நான்கு வருடங்கள் தொடர்ந்தன.






பயத்தின் காரணமாக நான் இதைப் பற்றி என் பெற்றோரிடம் சொல்லவே இல்லை. தாஜ் ஹோட்டலுக்கு வெளியே பாலியல் தொழிலாளியாக வேலை செய்ததைப் பற்றி பேசிய வர்மா, அந்த நேரத்தில் தனக்கு பணம் தேவைப்பட்டதால், பெண்களின் ஆடைகளை அணிந்துகொண்டு நடமாடுவதை வெளிப்படுத்தினார். “மக்கள் என்னை ஓரிரு முறை அழைத்துச் சென்றனர், இங்கிருந்து கிடைத்த பணத்தில் நான் டிசைனிங் பொருட்களை வாங்கினேன். நான் இதை செய்ய விரும்பியதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை, யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை, ”என்று அவர் கூறியுள்ளார். மேலும் ரோஹித் வர்மா, தான் ஒரு நடிகருடன் டேட்டிங் செய்வதையும், அவர்கள் ஒன்றாக வாழ்வதையும் வெளிப்படுத்தினார். ஆனால் அவருக்கு அதிக வேலை கிடைக்க ஆரம்பித்த பிறகு அவரிடம் நடத்தை மாறியது எனவும் கூறியுள்ளார்.  ரோஹித் பிரபலமான ஆடை வடிவமைப்பாளர் மற்றும் மும்பையில் தனது ஸ்டுடியோவை வைத்திருக்கிறார். திரைப்பட ஆடைகளை வடிவமைப்பதற்காகவும், பிரபலங்கள் பேஷன் ஷோக்களுக்காகவும், தனது டிசைன்களை வெளியிடுவதற்காகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார். அவர் 2009 இல் சல்மான் கானின் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்ட  பிறகு பரவலாக அறியப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில்  அவர் LGBT சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.