பத்தாம் வகுப்பு அறிவியல்  பாடப்புத்தகத்தில் இருந்து வேதியியல் தனிம மூலக்கூறு அட்டவணை உள்ளிட்ட சில முக்கிய பாடப்பிரிவுகள் நீக்கப்படுவதாக என்.சி.இ.ஆர்.டி அறிவித்துள்ளது.


இந்தியாவில் மத்திய மற்றும் மாநில கல்வி வாரியங்கள் தனித்தனியே செயல்பட்டு வருகின்றன. மத்தியக் கல்வி வாரியங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான பாடத்திட்டத்தை பின்பற்றி வருகிறது. மாநிலக் கல்வி வாரியங்கள் அந்த மாநிலங்களுக்கு ஏற்ற பாடத்திட்டங்களை வகுத்துள்ளன.


தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) வழங்கும் புத்தகங்களை சிபிஎஸ்இ பின்பற்றுகிறது. எஸ்சிஇஆர்டி மாநிலப் பாடத் திட்டத்தையும் பின்பற்றுகின்றன. அவ்வப்போது பாடத்திட்டங்களை மற்றுவது வழக்கம். அந்த வகையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து முகலாயர்கள் பகுதி நீக்கப்படும் என்று என்சிஇஆர்டி கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அறிவித்து இருந்தது.


இது நடப்பு கல்வி ஆண்டான 2023- 2024-லேயே அமலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புக்கான பாடப்புத்தகங்களில் இருந்து சில பாடங்கள் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதாவது, தனிம வரிசை அட்டவணை (periodic table) உள்ளிட்ட பாடங்கள் அறிவியல் புத்தகங்களில் இருந்து நீக்கபப்ட்டுள்ளன. சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் எரிசக்திக்கான ஆதாரம் உள்ளிட்ட பாடங்களும் நீக்கப்பட்டுள்ளன. அதேபோல், சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து ஜனநாயாகத்தின் முழு அத்தியாயமும் (chapter) நீக்கப்பட்டுள்ளது. பிரபலமான போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள், அரசியல் கட்சிகள், ஜனநாயகத்தின் சவால்கள் ஆகிய அத்தியாயங்கள் நீக்கப்படுவதாக என்.சி.இ.ஆர்.டி அறிவித்துள்ளது.


கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பின் பத்தாம் வகுப்பு மாணவர்களின் சுமையை குறைக்கும் நடவடிக்கையாக என்.சி.இ.ஆர்.டி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.





இந்த ஆண்டின் தொடக்கத்தில் பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து பரிணாம கோட்பாடு என்ற பகுதி நீக்கப்பட்டிருந்தது விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க..


Crime: திருமணமான 20 நாட்களில் இளம்பெண் கொலை; குடும்பத்தோடு சேர்ந்து தற்கொலை நாடகம் - பகீர் பின்னணி..!


Kerala Train Fire: கேரளாவில் தீக்கிரையான நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்..! விபத்தா? திட்டமிட்ட சதிச்செயலா..?