CUET PG result: CUET முதுகலை தேர்வில் பாடவாரியாக முதலிடம் பிடித்தவர்களின் விவரங்களையும், தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
CUET முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு:
தேசிய தேர்வு முகமை (NTA) CUET 2024 முதுகலை தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் pgcuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தங்களது தேர்வு முடிவுகளை அறியலாம். அதில் மாணவர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும். தேர்வு நடைபெற்ற 157 பாடங்களிலும் முதலிடம் பிடித்த மணவர்களின் விவரங்களும், அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
முடிவுகளை காண்பது எப்படி?
- CUET முதுகலை தேர்வுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்
- முகப்பு பக்கத்தில் இருக்கு தேர்வு முடிவிற்கான லிங்கை கிளிக் செய்யவும்
- விண்ணப்ப எண், பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து சப்மிட் தரவும்
- தேர்வு முடிவுகள் இப்போது திரையில் தோன்றும்
முதுகலை தேர்வு:
இந்த ஆண்டு, தேர்வு மார்ச் 11 முதல் மார்ச் 28 வரை கணினி அடிப்படையிலான தேர்வாக (CBT) இந்தியா மற்றும் வெளிநாடுகளில், 262 நகரங்களில் 572 மையங்களில் நடத்தப்பட்டது. இந்த தேர்வினை எழுத 4.6 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இது முந்தைய ஆண்டு பதிவான, 4.5 லட்சத்தை காட்டிலும் சற்றே அதிகமாகும். அதோடு, கடந்த ஆண்டை போல இந்த முறையும் பெண்களே அதிகம் விண்ணப்ப்இத்து இருந்தனர். மொத்தம் பதிவு செய்த 4 லட்சத்து 62 ஆயிரத்து 603 விண்ணப்பதாரர்களுக்காக, 7 லட்சத்து 68 ஆயிரத்து 414 தேர்வுகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
190 பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு:
நாடு முழுவதும் உள்ள 190 பல்கலைக்கழகங்களில் முதுகலை படிப்பில் சேருவதற்கான வாய்ப்பு இந்த தேர்வின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதில் மத்திய அரசு பல்கலக்கழகங்கள் 39, மாநில அரசு பல்கலைக்கழகங்கள் 39, அரசு கல்வி நிறுவனங்கள் 15 மற்றும் தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் 97 ஆகியவை அடங்கும்.
CUET தேர்வு என்றால் என்ன?
2022 ஆம் ஆண்டு முதல் அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்கள், மற்ற பங்கேற்கும் பல்கலைக்கழகங்கள் / நிறுவனங்கள் / தன்னாட்சி கல்லூரிகளில் உள்ள அனைத்து முதுகலை திட்டங்களிலும் சேர்க்கைக்காக பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. பங்கேற்கும் பல்கலைக்கழகங்கள்/நிறுவனங்கள் தகுதிப் பட்டியலைத் தயாரிக்கும். தேசிய தேர்வு முகமை (NTA) வழங்கும் CUET (PG) 2024 மதிப்பெண் அட்டையின் அடிப்படையில் தனிப்பட்ட கவுன்சிலிங் முடிவுகள் பல்கலைக்கழகங்களால் எடுக்கப்படும். அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, CUET (PG) 2024க்கான வினாத்தாள்கள் தயாரிப்பில், சுமார் 950 பாட நிபுணர்கள் மற்றும் 200 மொழிபெயர்ப்பாளர்கள் ஈடுபட்டனர்.