பாகிஸ்தானில் தனது 6 குழந்தைகளின் கண்முன்னே மனைவியை கொன்று கொப்பரையில் போட்டு வேகவைத்த  கணவனின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பாகிஸ்தானில் உள்ள கராச்சியில், குல்ஷன் இ இக்பால் பகுதியில் கடந்த 9 மாதங்களாக மூடப்பட் டுள்ள தனியார் பள்ளியின் காவலாளியாக பணியாற்றி வந்தவர் 36 வயதான ஆஷிக். இதே பள்ளி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். 


இந்நிலையில், ஆஷிக்கின் 15 வயது மகள் நேற்று முன்தினம் போலீசில் அதிர்ச்சிகர தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த சிறுமி சொன்ன இடத்துக்கு சென்ற போலீசார், சமையறையில் உள்ள கொப்பரையில் ஆஷிக்கின் மனைவி நர்கீசின் ஒரு கால் துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் வெந்த நிலையில் மீட்டனர். 


முதற்கட்ட விசாரணை குறித்து மாவட்ட கிழக்கு எஸ்எஸ்பி அப்துர் ரஹீம் ஷெராஸி தி நியூஸிடம் கூறுகையில், ”அந்தப் பெண்ணின் கணவர் பஜவுர் ஏஜென்சியைச் சேர்ந்த ஆஷிக் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்தார், மேலும் குடும்பம் பள்ளியின் பணியாளர் குடியிருப்பில் வசித்து வந்தது. எட்டு முதல் ஒன்பது மாதங்களுக்கு முன்பு பள்ளி மூடப்பட்டு இருந்துள்ளது. குழந்தைகளின் வாக்குமூலங்கள் மூலம் சந்தேக நபர் முதலில் தனது மனைவியை தலையணையின் உதவியுடன் மூச்சுத்திணறடித்து பின்னர் தனது பிள்ளைகளுக்கு முன்னால் கொப்பரையில் கொதிக்கவைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் ஒரு கால் உடலிலிருந்து துண்டிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. ஆசிக் பயன்படுத்திய சந்தேகத்திற்குரிய இரண்டு செல்போன் மற்றும் அதன் சிம் கார்டுகள் எங்களிடம் உள்ளன. நாங்கள் அவரை தேடி வருகிறோம், விரைவில் அவரைக் கைது செய்வோம்." என தெரிவித்தார். 


சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை; இருப்பினும், கணவன் தனது மனைவியை தகாத உறவுக்கு வற்புறுத்தியதாகவும், அவளுக்குக் கீழ்ப்படிய மறுத்ததால் அவளைக் கொன்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்து சந்தேக நபரை கைது செய்ய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


உயிரிழந்த பெண்ணின் மகள் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கையில், செவ்வாய்கிழமை இரவு ஒரங்கி டவுனில் உள்ள தனது மாமா வீட்டிற்குச் சென்று நடந்த சம்பவம் குறித்து அவரிடம் தெரிவித்தேன். புதன்கிழமை மதியம் வீடு திரும்பிய அவர் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்சை அழைத்தார். ஆனால், உடல் சிதைந்த நிலையில் கிடந்ததைக் கண்ட டிரைவர் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண