ஃபேஷன் டிசைனிங் படிப்புகளுக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வான நிஃப்ட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஜனவரி 3ஆம் தேதி) கடைசித் தேதி ஆகும்.
ஃபேஷன் தொழில்நுட்பக் கல்வி
நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் நிஃப்ட் எனப்படும் தேசிய ஃபேஷன் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் அணிகலன் வடிவமைப்பு, ஃபேஷன் கம்யூனிகேஷன், ஃபேஷன் வடிவமைப்பு, பின்னலாடை வடிவமைப்பு, தோல் வடிவமைப்பு மற்றும் ஜவுளி வடிவமைப்பு உள்ளிட்ட இளங்கலைப் படிப்புகளைக் கற்பிக்கின்றன. ( B.Des. (Fashion Design), B.Des. (Leather Design), B.Des. (Accessory Design), B.Des. (Textile Design), B.Des. (Knitwear Design), B.Des. (Fashion Communication), B.FTech. (Apparel Production)
அதேபோல, முதுகலை வடிவமைப்புத் திட்டங்களும் (MDes) கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதில் முதுகலை ஃபேஷன் மேலாண்மை (MFM), முதுகலை ஃபேஷன் தொழில்நுட்பம் (MFTech) உள்ளிட்டவை கற்பிக்கப்படுகின்றன.
என்ன தகுதி?
IFT 2024 Eligibility Criteria: அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10, 12ஆம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எஸ்சி/ எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு அதிகபட்சம் ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு. அதேபோல நிஃப்ட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியதும் அவசியம்.
நிஃப்ட் நிறுவனங்கள் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கின்றன. இதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது. பொதுப் பிரிவு தேர்வர்களுக்கு ரூ.3,000 விண்ணப்பக் கட்டணமாகும். எஸ்சி/ எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு ரூ.1500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, டிசைனிங் மற்றும் ஃபேஷன் டெக்னாலஜி ஆகிய இரு படிப்புகளுக்கும் (BDes, BFTech) விண்ணப்பிக்க ரூ.4,500 விண்ணப்பக் கட்டணம் ஆகும். இதுவே எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ரூ.2500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் nift.ac.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு இன்றே (ஜனவரி 3ஆம் தேதி) கடைசித் தேதியாகும்.
தேர்வு எப்போது?
நாடு முழுவதும் 60 நகரங்களில் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று நிஃப்ட் 2024-க்கான தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் ஜனவரி 3ஆவது வாரத்தில் வெளியாக உள்ளது. தேர்வர்கள் nift.ac.in என்ற இணையதளத்தில் இருந்து அனுமதிச் சீட்டைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
தேர்வர்கள் https://exams.nta.ac.in/NIFT/ என்ற இணைப்பை க்ளிக் செது விண்ணப்பிக்க வேண்டும். அல்லது https://nift.ntaonline.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் தகவல்களுக்கு: https://nift.ac.in/sites/default/files/inline-files/PROSPECTUS-2024.pdf
தேர்வு முடிவுகள் எப்போது?
வழக்கமாக நுழைவுத் தேர்வு முடிவுகள் மார்ச் மாதத்தில் வெளியாகும். ஏப்ரல் மாதத்தில் நேரடித் தேர்வு நடைபெறும். இறுதிக்கட்டத் தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாகும்.
விண்ணப்பிப்பதில் சிரமம் இருந்தால், NIFTADMISSIONSIN@GMAIL.COM என்ற இ- மெயில் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: nift.ac.in