ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளுக்கான தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. அது தொடர்பான தகவல்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று விவரங்களை அறியலாம்.
அதன்படி தமிழ்நாடு பொது சார் நிலை ஆராய்ச்சியாளர் பணி மற்றும் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளுக்கான தேர்வுகளுக்கான அறிவிப்பை இன்று டிஎன்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. அதில் தமிழ்நாடு பொது சார் நிலை ஆராய்ச்சியாளர் பணிக்கு 6 காலி பணியிடங்கள் என்று அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது. அதேபோல் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்ந்த பணிகளில் கம்யூட்டர் கீப்பர் பணிக்கு 30 காலி பணியிடங்களும், புள்ளியியல் உதவியாளருக்கு 2 காலி பணியிடங்களும், பிளாக் ஹெல்த் ஸ்டாடிஸ்டிஸியன் பணியிடங்களுக்கு 162 காலி பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்ந்த பணிகளுக்கு வரும்2022 ஜனவரி 9ஆம் தேதி தேர்வுகள் நடைபெற் உள்ளன. அதேபோல் பொது சார்நிலை ஆராய்ச்சியாளர் பணிகளுக்கான தேர்வு வரும் 2022 ஜனவரி மாதம் 22 ஆம் தேதி தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்த இரண்டு பணியிடங்களுக்கும் இன்று முதல் அடுத்த மாதம் 19ஆம் தேதி வரை விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் செய்யலாம். விண்ணப்பங்களை டி.என்.பி.எஸ்.சி தளத்தின் மூலமாக தான் செய்ய முடியும்.
மேலும் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்ந்த பணிகளுக்கு கணிதம் அல்லது புள்ளியியல் துறை சார்ந்த பட்டபடிப்பை படித்திருக்க வேண்டும். அதேபோல் பொது சார்நிலை ஆராய்ச்சியாளர் பணிகளுக்கான தேர்விற்கு விண்ணப்பிக்க பொருளாதாரம், புள்ளியியல், சமூக பணி, பொது நிர்வாகம் உள்ளிட்ட துறையில் முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க விரும்பும் பொது பிரிவை சேர்ந்தவர்கள் 30 வயதுக்குட்பட்டோராக இருக்க வேண்டும். பின்தங்கிய வகுப்புகள், எஸ் சி, எஸ்டி பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு எந்தவித வயது வரம்பும் இல்லை.
ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்ந்த பணிகளுக்கு தேர்வுக் கட்டணமாக 100 ரூபாயை செலுத்த வேண்டும். அதேபோல் பொது சார்நிலை ஆராய்ச்சியாளர் பணிகளுக்கான தேர்விற்கு விண்ணப்பிக்க 150 ரூபாயை தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த தேர்வு தொடர்பான இதர விவரங்களை தெரிந்து கொள்ள www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.
மேலும் படிக்க: டிகிரி இல்லையா? அப்போவும் கவலையில்ல.. 60 லட்ச சம்பளத்தில் இப்படி ஒரு வேலை..