நாடு முழுவதும் மே 5-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், தமிழ்நாட்டில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வெழுதினர். இதில் 12,730 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 557 நகரங்கள் மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்த 14 நகரங்களிலும் தேர்வு நடைபெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


மே 5ஆம் தேதி நீட் தேர்வு


தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த தேர்வில் பங்கேற்கும் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டானது, மே 2 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வானது மே 5ஆம் தேதி தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது.


இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு முடிவுகள் தற்போது (ஜூன் 4ஆம் தேதி) வெளியாகி உள்ளன. இதை மாணவர்கள் எப்படிக் காண்பது எனக் காணலாம்.






மாணவர்கள் https://exams.nta.ac.in/NEET/NEET2024SC.html என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளைக் காணலாம். ஜூன் 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 10 நாட்களுக்கு முன்பே இன்று தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.