இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீர் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை (National Testing Agency) வெளியிட்டுள்ளது
நீட் தேர்வு முடிவுகளை நகரம், தேர்வு மையங்கள் வாரியாகத் தனித்தனியாக சனிக்கிழமை மதியத்துக்குள் மணிக்குள் வெளியிட வேண்டும் என்று தேசியத் தேர்வுகள் முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த்து. இதையெடுத்து, நீட் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது.
நீட் தேர்வு 2024
2024-ம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். ஜூன் 14-ம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4ஆம் தேதி இரவே, நீட் தேர்வு முடிவுகளும் வெளியாகின. இதில் வழக்கத்துக்கு மாறாக 67 பேர் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதல் இடம் பெற்றனர். தேர்வில் இத்தனை பேர் அதிக மதிப்பெண் எடுத்தது பேசுபொருளானது.
அதன்பிறகு, நீட் தேர்வின்போது ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு, சில மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது பல்வேறு மோசடிகள் நிகழ்ந்தது சர்ச்சையை கிளப்பது. நீதிமன்றத் தலையீட்டுக்குப் பிறகு கருணை மதிப்பெண்கள் வழங்கிய 1,563 பேருக்கு ஜூன் 23-ம் தேதி மறுதேர்வு அறிவிக்கப்பட்டது. அவர்களில் 816 பேர் மட்டுமே நீட் மறுதேர்வை எழுதி இருந்தனர்.
நீட் தேர்வுகளில் நடந்த முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகின்றன.
https://exams.nta.ac.in/NEET/images/NEET_2024_RE_EXAM_KEY_30.06.2024.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து விடைத்தாள் குறிப்பை தரவிறக்கம் செய்யலாம்.
நீட் முறைகேடு குஜராத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நீட் தேர்வை ரத்து செய்து சரியாக இருக்காது என மத்திய அரசு தெரிவித்திருந்தது. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் மாணவர்களின் அடையாளங்களை வெளியிடாமல் நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக தேர்வு முடிவுகளை சனிக்கிழமை மதியம் 2 மணிக்குள் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்வு முடிவுகளை காண:
- மாணவர்கள் https://neet.ntaonline.in/frontend/web/revised-scorecard/index -என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
- விண்ணப்ப எண், பிறந்த தேதி, இ- மெயில் முகவரி அல்லது தொலைபேசி எண் ஆகியவற்றை பதிவிட்டால் முடிவுகளை காணலாம்.