மருத்துவப் படிப்பிற்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. 


பொது மருத்துவம்,பல் மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சேர்வதற்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான நீட் தேர்வு தேதி அறிவிகக்ப்பட்டுள்ளது.  


நீட் தேர்வு எப்போது?


மே மாதம் 5-ம் தேதி இளங்களை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. ஜூன்,14-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. 


விண்ணப்பிப்பது எப்படி?


விண்ணப்பப் படிவம் வெளியான உடன், தகுதியான தேர்வர்கள் https://nta.ac.in/ மற்றும் https://neet.nta.nic.in/ - ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்க வேண்டும். நீட் தேர்வில் பொதுவாக இயற்பியியல், வேதியியல் உயிரியல் மற்றும் கணிதம் அல்லது எலக்டிவ் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். கல்வித் தகுதி, பாடத்திட்டம், தகுதி மற்றும் பிற தேவையான விவரங்களை என்டிஏ விரைவில் வெளியிட உள்ளது. 


விண்ணப்ப கட்டணம்


நீட் தேர்வு எழுதுவதற்கு ஆன்லைன் மூலமாக பிப்ரவரி 9-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக பொது பிரிவினருக்கு - ரூ.1,700; EWS/OBC - NCL பிரிவினருக்கு - ரூ.1,600;  பழங்குடியின / பட்டியலின / PWD/ Transgender ஆகியோருக்கு - ரூ.1000  மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியுடன் (ஜிஎஸ்டி) செலுத்த வேண்டும்.


மேலும் +91-11-40759000 என்ற எண்ணிலும், neet@nta.ac.in -மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் தேர்வு மையங்கள் குறித்த விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நீட் தேர்வு மே மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி முதல் 5.20 மணிவரை 200 நிமிடங்கள் நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.