12 ராசிகளுக்கான “மாசி மாத“ ராசி பலன்.. 


மேஷ ராசி :


அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  பதினொன்றாம் இடத்தில் சூரிய பகவான் பெயர்ச்சி ஆகிறார்.  அதாவது மேஷ ராசிக்கு ஐந்தாம் அதிபதி  சூரியன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பெயர்ச்சி ஆவதால் உள்ளம் குதூகலமடையும்.  தள்ளிப்போன  திருமண பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும்.  வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்திடும்.  பண வரவு உண்டாகும்.  உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.  அரசு வழிகளில் ஆதாயம் உண்டு.


பரிகாரம் :


பெருமாள் கோவிலில் இருக்கக்கூடிய கருட பகவானை வணங்கி வர வெற்றிகள் உண்டாகும்.


ரிஷப ராசி :


அன்பான ரிஷப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  பத்தாமிடத்தில் சூரியன் பிரவேசிக்கிறார்.  இந்த மாசி மாதத்தில் உங்களுடைய தொழில்  முன்னேற்றம் மிக வேகமாக இருக்கும்.  நான்காம் அதிபதி பத்தாம் வீட்டில்  இருப்பதால் நிலம் வீடு தொடர்பான  பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள்.  ரிஷப ராசிக்கு ஏற்கனவே லாப ஸ்தானத்தில் ராகு அமர்ந்து தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் வெற்றியை கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் உங்களின்  சிந்திக்கும் ஆற்றல் அதிகரிக்கும்.  அரசு வேலைக்காக காத்திருப்போரின் செவிகளுக்கு  நல்ல செய்தி வந்து சேரும்.  எதிர்பாராத தன வரவு உண்டு.


பரிகாரம் :


உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய சிவன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.


மிதுன ராசி :


அன்பான மிதுன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் ஒன்பதாம் இடத்தில்  சூரியன் பிரவேசிக்கிறார்.  மிதுன ராசிக்கு ஏற்கனவே பதினோராம் இடத்தில் குரு பகவான் சஞ்சாரம் செய்து  நன்மையை வழங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சூரியனும் உங்களுக்கு சாதகமாய் அமைந்தது  ஒட்டுமொத்த மாசி மாதத்தின் வலுமையும் உங்களுக்கே தரக் கூடியதாய் அமைகிறது.


பரிகாரம் :


காலையில் காக்கைக்கு  முடிந்தவரை உணவளியுங்கள்.


கடக ராசி :


அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே கடந்த இரண்டு வருடங்களாக தொண்டி மேல் தொல்லை அனுபவித்து வந்த  உங்களுக்கு,   இதோ ஏப்ரல் 30 உடன்  பெரிய பெரிய கஷ்டங்கள் விலகப் போகிறது. அதற்கு முன்பாக இந்த மாசி மாதத்தில்  கடக ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் பிரவேசிக்கிறார்  எதிலும் சற்று நிதானமாக இருப்பது நல்லது.  வாழ்க்கையில் அந்த மாசி மாத காலகட்டத்தில் நீங்கள் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் சற்று விதானித்து எடுப்பது சிறந்தது.  எந்த சுப காரியமாக இருந்தாலும் நீங்கள் ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பிறகு பார்த்துக் கொள்ளுங்கள்.


பரிகாரம்:


உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய மாரியம்மாள் கோவிலுக்கு சென்று வாருங்கள்.


 சிம்ம ராசி :


அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே சிங்கம் போல் இருக்கும் உங்கள் வாழ்க்கையில்  குரு  பகவான் பாக்யஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் அமர்ந்து ஓரளவுக்கு  நன்மைகளை செய்து வந்தாலும்  ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பிறகு வேலையில் ஒரு மாற்றம் கண்டிப்பாக உண்டு.  அதன் பிறகு தற்போது வரக்கூடிய மாசி மாதத்திலும் சிம்ம ராசிக்கு ஏழாம் வீட்டில் ராசி அதிபதி அமர்வது கோடீஸ்வர  யோகத்தைக் கொண்டு வரும்.  உங்களுக்கு இரண்டாம் பாவத்தில் கேது இருப்பதால் வாக்கில் சற்று கவனமாக இருத்தல் மேன்மையை தரும்.


பரிகாரம் :


கோவிலில் உள்ளே நவகிரகத்தில்  இருக்கும் சூரிய பகவானை வழிபடுவது நல்லது.


கன்னி ராசி :


அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே ஏற்கனவே குரு பகவான் அஷ்டம ஸ்தானம் எனப்படும்  எட்டாம் பாவத்தில் அமர்ந்து சிறுசிறு கஷ்டங்களையும் துன்பங்களையும் கொண்டு வந்தாலும் இந்த மாசி மாதத்தில் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் சூரியன் அமர்ந்து மிகப் பெரிய யோகத்தை கொண்டு வர போகிறார்.  எதிரிகளின் ஆட்டம் அழியும்.  நோய்கள் உடனே குணமாகும்.  அரசு தேர்வுக்காக எழுதி காத்திருக்கும் நபர்களுக்கு  அரசு உத்தியோகம் இருக்க வாய்ப்புண்டு.  சமுதாயத்தில் மதிப்பு மரியாதை கூடும் வீட்டில்  சுபகாரிய நிகழ்வுகள் நடைபெறும்.


பரிகாரம் :


நவகிரகங்களில் இருக்கும் குரு பகவானை வழிபட்டு வருவது சிறப்பு.


துலாம் ராசி :


அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சூரியன் அமர்கிறார்.  இந்த காலகட்டம் உங்களுக்கு பொன்னான காலகட்டம். ஏற்கனவே முதல் திருமணத்தில் முடிவு ஏற்பட்டு இரண்டாம் திருமணத்திற்காக காத்திருக்கும்  துலாம் ராசி வாசகர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு.  வீட்டில் மழலைச் செல்வம் உண்டு.  புது வாய்ப்புகள் உங்கள் இல்லம் தேடி வரப் போகிறது.


பரிகாரம் :


ஸ்ரீ கிருஷ்ணாவை வணங்கி வர சங்கடங்கள் விலகும்.


தனுசு ராசி :


அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் சூரியன் பிரவேசிப்பது  தைரியத்தையும் மிகப்பெரிய ஆற்றலையும் உங்களுக்கு கொண்டு வரப் போகிறது குறிப்பாக சமுதாயத்தில் பெரிய பெரிய காரியங்கள் எல்லாம் நீங்கள் சுலபமாக முடிப்பீர்கள்  உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற போகிறீர்கள் நீங்கள் சொல்வது தான்  சட்டம்  என்ற நிலை  வரும்.  ஏற்கனவே ஐந்தாம் பாவத்தில் குரு அமர்ந்து உங்கள் ராசியை பார்த்து பொலிவு ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வைக்கப் போகிறார்.


பரிகாரம் :


கோவிலில் இருக்கும் ஆஞ்சநேயரை வழிபட்டு வர வெற்றிகள் உண்டாகும்.


மகர ராசி :


அன்பார்ந்த மகர ராசி வாசகர்களின் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் பாவத்தில் சூரியன் பிரவேசிக்கிறார் அஷ்டமாதிபதி சூரியன் இரண்டாம் பாகத்தில் பிரவேசிப்பது  நீங்கள் பேசும் பேச்சு உங்களுக்கு எமனாக முடியும்.  ஆனாலும் வழக்கில் நீங்கள் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலை தான் உள்ளது.  மகர ராசியில் ஏற்கனவே செவ்வாய் உச்சம் பெற்ற நிலையில் அமர்ந்திருக்க தற்போது  சூரியனும்  இரண்டாம் இடத்தில் அமர்ந்து நீங்கள் சம்பாதிக்கும் வருவாயை உயர்த்தப் போகிறார்.  சேமிப்பில்  பணம் இருப்பு இருக்கும்.


பரிகாரம் :


 கோவிலுக்கு சென்று  வயதான முடியாதவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள்.


கும்ப ராசி :


அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே மாசி மாதத்தில் சூரியன்  உங்களுடைய ராசியிலேயே வந்து அமரப் போகிறார்.  கும்ப ராசிக்கு ஏற்கனவே ஏழரை சனியில் ஜென்ம சனி நடந்திருக்க தற்போது சூரியனும் அந்த வீட்டில் இணைவது உங்கள் மீது ஒரு ஈர்ப்பை உருவாக்கும்.  கும்ப ராசிக்கு ஏற்கனவே நல்ல காலம் சென்று கொண்டிருப்பதால் நீங்கள் மீண்டும் தூர பிரயாணம் ஆன்மீக காரியங்களில்  ஈடுபடுதல் போன்றவற்றை பார்க்க முடிகிறது.


பரிகாரம் :


வீட்டில் அருகில் இருக்கக்கூடிய ஏதேனும் ஒரு முருகன் கோவிலுக்கு சென்று மனம் உருகி கந்த சஷ்டி கவசத்தை படியுங்கள்.


 மீனம் ராசி :


அன்பார்ந்த வாசகர்களே மீனம் ராசிக்கு ஆபத்தானத்தில்  செவ்வாய் உச்சம் பெற்ற நிலையில் அமர்ந்திருக்க வருகின்ற மாசி மாதத்தில் மீன ராசிக்கு 12 ஆம் பாவத்தில் சூரியன் அமர்கிறார்  கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற விதிக்கு ஏற்ப சூரியன் ஆறாம் அதிபதியாகி அவர் 12 ஆம் வீட்டில் மறைவது மிகப்பெரிய யோகத்தை உங்களுக்கு கொண்டு வரும்.  மருத்துவ செலவுகள் மூலமாக புத்துயிர் பெறுவீர்கள்.  கேட்ட இடத்தில்  கடன் கிடைக்கும்.  மீன ராசிக்கு 12ஆம் வீட்டில் சூரியன் பிரவேசிப்பதால் நீண்ட தூர பிரயாணம் தேசம் போன்ற இடங்களுக்கு வேலைக்காக செல்ல வேண்டி வரலாம்.  ஆனால் இது அத்தனையும்  நல்லபடியாக முடியும்.


பரிகாரம் :


உங்கள் வீட்டில் அருகில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று தியானம் செய்து தீபம் போட்டு வர பிரச்சனைகள் விலகும்.