நாள்: 10.03.2024 - ஞாயிற்றுகிழமை
நல்ல நேரம்:
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை
இராகு:
காலை 4.30 மணி முதல் காலை 6.00 மணி வரை
குளிகை:
மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
எமகண்டம்:
நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். பிரியமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்பு உண்டாகும். உத்தியோகத்தில் மதிப்பு மேம்படும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். திடீர் தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். முயற்சி நிறைந்த நாள்.
ரிஷபம்
நட்பு வட்டம் விரிவடையும். உடன் பிறந்தவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். ஆன்மிகம் தொடர்பான பயணங்கள் கைகூடும். சமூகப் பணிகளில் ஆதரவு மேம்படும். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். எதிர்காலம் சார்ந்து சில பணிகளை மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் இருந்துவந்த தடைகள் குறையும். சுகம் நிறைந்த நாள்.
மிதுனம்
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திடீர் தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உறவினர்களின் வருகை உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். உயர் அதிகாரிகளிடத்தில் மதிப்பு மேம்படும். சிந்தனைகளில் சில மாற்றங்கள் உண்டாகும். நட்பு நிறைந்த நாள்.
கடகம்
எதிலும் சுயமாக சிந்தித்துச் செயல்படுவது நல்லது. நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும். கனிவான பேச்சுகளின் மூலம் நன்மதிப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். அலுவலகத்தில் சிறு சிறு விமர்சனங்கள் தோன்றி மறையும். அரசு தொடர்பான பணிகளில் விழிப்புணர்வு வேண்டும். மறதி நிறைந்த நாள்.
சிம்மம்
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்துகொள்வீர்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். சுபம் நிறைந்த நாள்.
கன்னி
குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். பழக்க வழக்கங்களில் மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் அனுகூலமான சூழல் ஏற்படும். பயணங்களின் மூலம் புதிய வாய்ப்பு கிடைக்கும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். ஆய்வு நிறைந்த நாள்.
துலாம்
உயர் கல்வி குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை அறிவீர்கள். சக ஊழியர்களிடத்தில் நிதானம் வேண்டும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். சிலரின் அறிமுகங்களின் மூலம் திருப்பங்கள் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள்.
விருச்சிகம்:
குடும்பத்தினரிடையே அனுசரித்துச் செல்லவும். வித்தியாசமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். மனை சார்ந்த கடனுதவிகள் சாதகமாகும். லாபம் நிறைந்த நாள்.
தனுசு
தன்னம்பிக்கையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். இணையம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் சாதகமாகும். பெருமை நிறைந்த நாள்.
மகரம்
மனதளவில் இருந்துவந்த சஞ்சலங்கள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். பழைய சரக்குகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். அலுவலகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். யோகம் நிறைந்த நாள்.
கும்பம்
மனதில் சேமிப்பு தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். கால்களில் சிறு சிறு வலிகள் தோன்றி மறையும். மனதளவில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். ஆக்கப்பூர்வமான நாள்.
மீனம்
சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். ரகசியமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சிலரின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகத்தில் ஒருவிதமான சோர்வுகள் தோன்றி மறையும். திடீர் முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் ஏற்படும்.
ஆசைகள் மேம்படும் நாள்