முதுநிலை நீட் தேர்வு


இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித் தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது. இளநிலை நீட் தேர்வு முடிந்து தற்போது மருத்துவ கல்லூரியில் சேர மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று தொடங்கியுள்ளது.


இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவ பட்ட மேற்படிப்புகான எம்டி, எம்எஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு என 42,500 இடங்கள் உள்ளன.  தமிழ்நாட்டில் சுமார் 4 ஆயிரம் இடங்கள் உள்ளதாக தெரிகிறது. அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் முதுநிலை மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை என்.பி.இ. எனப்படும் தேசியத் தேர்வுகள் வாரியம் நடத்தி வருகிறது. இந்நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான முதுகலை நீட் மருத்துவத் தேர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.


1.60 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு


முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 600 தேர்வு மையங்களில் நடைபெற்று வருகிறது. எம்பிபிஎஸ் முடித்த 1.60 லட்சத்துக்கு அதிகமான மருத்துவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர். நாடு முழுவதும் 271 நகரங்களில் சுமார் 600 தேர்வு மையங்களில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தொடங்கியுள்ளது. காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.


1.60 லட்ச மாணவர்கள் எழுதும் தேர்வு, பகல் 12.30 மணிக்கு முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, சேலம், திருச்சி, கோவை, நெல்லை ஆகிய இடங்களில் தேர்வு மையங்களில் முதுநிலை நீட் தேர்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


Earthquake: ஜம்மு காஷ்மீர், ஆஃப்கானிஸ்தானில் அடுத்தடுத்து அதிகாலையில் நிலநடுக்கம்: குலுங்கிய கட்டடங்கள்!


Philippines: பிலிப்பைன்ஸில் தொடரும் தாக்குதல்... நீக்ரோஸ் ஓரியண்டல் மாகாண ஆளுநர் சுட்டுக்கொலை