பிலிப்பைன்ஸ் நாட்டில் நீக்ரோஸ் ஓரியண்டல் மாகாண ஆளுநர் ரோயல் டேகோமா மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் தொடர்ந்து அரசியல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீதான தாக்குதல் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் ரோயல் டேகோமா மீதும் தாக்குதல் நடைபெற்றுள்ளது. உள்ளூர் ஊடக தகவலின்படி, அவர் தனது சொந்த ஊரான பாம்ப்லோனா நகரில் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் திடீரென ராணுவ உடையில் சில மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் வந்துள்ளனர்.
அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தங்களது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ஆளுநர் ரோயல் டேகோமா உயிரிழந்தார்.