நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20 ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பதாக தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது. நேற்றுடன் காலஅவகாசம் முடிந்தநிலையில் 20-ஆம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

Continues below advertisement


நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் இதுவரை 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 


எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்குத் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது.


ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. இந்த முறை ஜூலை 17ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 6-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதுவரை விண்ணப்பிக்காத தேர்வர்கள், வரும் 16-ம் தேதி வரை https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒவ்வொரு பொதுப்பிரிவு மாணவரும் ரூ.1,600 செலுத்த வேண்டியது கட்டாயம். ஓபிசி பிரிவினருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கும் ரூ.1,500 கட்டணம் ஆகும். எஸ்சி/ எஸ்டி பிரிவு மாணவர்கள் ரூ.900 செலுத்த வேண்டியது அவசியம். இந்தியாவுக்கு வெளியே உள்ள தேர்வு மையங்களில் எழுத விரும்பும் மாணவர்களுக்கு ரூ.3,000 கட்டணமாக உள்ளது. 


சமூக இடைவெளி விதிகளை உறுதி செய்வதற்காக, தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளது.


மேலும், கோவிட்-19 விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, அனைத்துத் தேர்வர்களுக்கும் மையங்களில் முகக்கவசங்கள் வழங்கப்படும். உள்ளே வர மற்றும் வெளியே செல்ல தனித்தனி நேரங்கள், தொடர்பில்லா பதிவுமுறை, முறையான கிருமி நாசினி நடவடிக்கைகள், சமூக இடைவெளியுடன் கூடிய அமரும் வசதிகள் உள்ளிட்டவையும் உறுதி செய்யப்படும்.


அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், www.nta.ac.in and https://neet.nta.nic.in என்ற இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  


வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணையும்,  neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியும் பயன்படுத்திக் கொள்ளலாம். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண