நீட் எனப்படும் இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு எப்போது, அதைப் பதிவிறக்கம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்குத் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது.


ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. இந்த முறை ஜூலை 17ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 6-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, மே 20ஆம் தேதி கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டது. 


இந்த நிலையில் மே 24ஆம் தேதி தொடங்கி, மே 27 வரை விண்ணப்பங்களைத் திருத்த அவகாசம் அளிக்கப்பட்டது. வழக்கமாக தேர்வுக்கு 15 நாட்கள் முன்னதாக ஹால்டிக்கெட் வெளியாகும். இந்த சூழலில், நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை எப்படிப் பதிவிறக்கம் செய்வது என்று பார்க்கலாம்.


நீட் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?



  • https://neet.nta.nic.in என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்யவும்.

  • ‘NEET UG 2022 admit card’என்ற பக்கத்தை க்ளிக் செய்ய வேண்டும். 

  • தேர்வர்களின் விவரங்களைப் பூர்த்திசெய்து உள்ளே செல்லலாம்.

  • உள்ளே கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். 

  • நீட் ஹால்டிக்கெட் பக்கம் தோன்றியதும் பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளலாம்.




முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்


சமூக இடைவெளி விதிகளை உறுதி செய்வதற்காக, தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் 543 நகரங்களிலும் இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் நீட் தேர்வு நடைபெற உள்ளது.


மேலும், கோவிட்-19 விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, அனைத்துத் தேர்வர்களுக்கும் மையங்களில் முகக்கவசங்கள் வழங்கப்படும். உள்ளே வர மற்றும் வெளியே செல்ல தனித்தனி நேரங்கள், தொடர்பில்லா பதிவுமுறை, முறையான கிருமி நாசினி நடவடிக்கைகள், சமூக இடைவெளியுடன் கூடிய அமரும் வசதிகள் உள்ளிட்டவையும் உறுதி செய்யப்படும்.


அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், www.nta.ac.in மற்றும் https://neet.nta.nic.in என்ற இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண