சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதியை அறியாதவர்கள் தற்போது யாரும் இருக்க முடியாது. வலிமை படத்தை பார்த்துவிட்டு தனது கருத்தை பகிர்ந்ததில் இருந்து அவர் சமூக வலைத்தளங்களில் பல எதிர்வினைகளை சந்திக்க தொடங்கிவிட்டார். அதன் பிறகு அவர்தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும், தனக்கு ஆறுதலாக யாரும் இல்லை என்பது போல  இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அது சமூக வலைத்தளங்களில் படு வைரலானது. இதனை தொடர்ந்து தான் சிம்புவை காதலிப்பதாக கூறி , அவர் வீட்டு முன்னால் அமர்ந்துக்கொண்டு தர்ணா செய்துக்கொண்டிருந்தார்.


அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்த ஸ்ரீநிதிக்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் வர தொடங்கிவிட்டன. ஆனாலும் சிலர் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதை புரிந்துக்கொண்டு  “ இந்த பெண்ணிற்கு இப்போது மருத்துவ உதவி தேவை “ என்றும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.







இந்த நிலையில் ஸ்ரீநிதியின் நெருங்கிய தோழியும் , சக சின்னத்திரை நடிகையுமான நட்சத்திரா காதல் வாழ்க்கையும்  மோசமாக உள்ளதாகவும் , அவர் மறைந்த நடிகை சித்திராவை போல முடிவெடுப்பதற்கு முன்னால் அவர் குறித்து பேச வேண்டும் என இன்ஸ்டாகிராம் லைவில் பகிரங்கமாக அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியிருந்தார். சொல்லவா வேண்டும்! அதன் பிறகு நட்சத்திரா குறித்து சமூக வலைத்தளங்களில் கிசு கிசுக்க தொடங்கிவிட்டனர்.





இந்நிலையில் தன்னை பற்றி ஸ்ரீநிதி பேசியதற்கு , நட்சத்திரா விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை ஷேர் செய்தார் அதில் “ஒரு  இரண்டு மூன்று நாட்களாக ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. அதாவது நான் ஏதோ பிரச்சனையில் இருக்கிறேன் . நான் காதலிக்கும் நபரின் குடும்பம் என்னை கட்டாயப்படுத்தி வீட்டுக்குள்ளேயே வச்சுருக்காங்க . என்னை யாரோ பிடிச்சு வச்சுருக்காங்க அப்படினெல்லாம் சொல்லுறாங்க. நான்  நல்லாதான் இருக்கேன். தினமும் ஷூட்டிங் போயிட்டு வந்துட்டுதான் இருக்கேன். இதை பற்றி நான் முன்னதாகவே விளக்கம் கொடுத்திருக்கலாம் . ஆனால் நான் என்ன நினைத்தேன் என்றால் , ஸ்ரீநிதியை ஃபாலோ செய்பவர்களுக்கு நன்றாக தெரியும் அவள் கொஞ்சம் மன அழுத்தத்தில் இருக்கிறாள் அப்படினு. அதனால அவர் போடும் பதிவுகளை நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என நினைத்தேன். என் மேல இருக்க அக்கறையில நிறைய பேர் பாதுகாப்பா இருக்கீங்களானு தொடர்ந்து கேட்டுட்டு இருக்கீங்க. நான் பாதுகாப்பா , நிம்மதியா இருக்கேன்” என தெரிவித்திருக்கிறார்.