தமிழ்நாடு முழுவதும் 400 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 82,500 மாணவ-மாணவிகள் தமிழ் மொழியில் ‘செயற்கை நுண்ணறிவை’பயன்படுத்தி நான் முதல்வன் அண்ணா பல்கலைக்கழக ‘குவி’தமிழ்நாடு கோடர் பிரிமியர் லீக்கில் இணைந்து செயலாற்றி வருகின்றனர்.
அண்ணா பல்கலை, டிஎன்எஸ்டிசி, சியட் ஆகியவை குழுவாக இணைந்து நான் முதல்வன் அண்ணா பல்கலைக்கழக ‘குவி’ தமிழ்நாடு கோடர் பிரிமியர் லீக்கை (NM-AU-GUVI TNcpl) தொடங்கியுள்ளது.
தமிழ் மொழியில் ‘செயற்கை நுண்ணறிவை’பயன்படுத்தி, 400 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 82,688 மாணவ-மாணவிகள் ‘நான் முதல்வன் அண்ணா பல்கலைக்கழக ‘குவி’ தமிழ்நாடு கோடர் பிரிமியர் லீக்’கில் (NM-AU-TNcpl) பங்கேற்றனர். தமிழ்நாட்டு இளைஞர்களிடையே தாக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த பங்கேற்பு அமைந்துள்ளது.
ஐஐடி மெட்ராஸ் தொழில் ஊக்குவிப்பில் உருவான இந்தியாவின் முன்னணி பிராந்திய எட்டெக் (EdTech) (GUVI <https://www.guvi.in/>) தளம், ஐஐஎம் அகமதாபாத், மதிப்புமிக்க ஹெச்சிஎல் குழுமத்தின் ஒரு பகுதி ஆகியவை இணைந்து தொடர்ச்சியான ஹேக்கத்தான்கள் மூலம் தமிழக பொறியியல் மாணவர்களுக்கு, கோடிங் பயிற்சிக்கான NM-AU-TNcpl திட்டத்தை தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’திட்டம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) ஆகியவை இதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. இத்திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2024 பிப்ரவரியில் தொடங்கி வைத்தார்.
‘லேர்னத்தான்’-ஐத் தொடர்ந்து 200 சிறந்த அணிகள் ‘ஐடியாத்தான்’ நிலைக்கு முன்னேறி, செயற்கை நுண்ணறிவில் சிக்கல்களைத் தீர்க்கும் திறன்களை வெளிப்படுத்தின. ஐஐடியில் ஏப்ரல் 12ம் தேதியன்று நடைபெற்ற 24 மணி நேர செயற்கை நுண்ணறிவு ஹேக்கத்தான் இறுதிப் போட்டியில் 75 சிறந்த அணிகள் பங்கேற்று முன்மாதிரிகளை உருவாக்கி இத்திட்டத்தின் நம்பகத்தன்மையை வெளிப்படுத்தின.
இந்த திட்டத்தின் சாத்தியக் கூறுகள், கருத்து ஆதாரத்தை மதிப்பிடும் ‘குவி-ஏஐ’ என்ற செயற்கை நுண்ணறிவு கருவியை குவி அறிமுகப்படுத்தியது. தொழில்நுட்ப மதிப்பீட்டில் மனிதத் தலையீடு இன்றி நியாயமான தீர்வுகளை உறுதி செய்கிறது. இந்நிகழ்வு தமிழக மாணவர்களின் தனித்திறமையை எடுத்துரைப்பதாகவும், தமிழகத்தின் அனைத்து மாணவர்களும் தொழில்நுட்பக் கல்வியை அணுகும் வகையிலும் அமைந்திருந்தது.
NM-AU-TNcpl இறுதிப் போட்டியின் முதல்நாள் நிகழ்வில் டிஎன்எஸ்டிசி நிர்வாக இயக்குநர் இன்னோசன்ட் திவ்யா தலைமை விருந்தினராகவும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஆர்.வேல்ராஜ் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றனர். சமூக-பொருளாதார மேம்பாட்டை வளர்ப்பதில் பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அவர்களின் பங்கேற்பு அமைந்திருந்தது.
குவி-யின் சுயவேகப் படிப்புகள், திறன் சான்றிதழ்கள், தொழில் திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள, பின்வரும் இணைப்பைப் பார்வையிடவும்: www.guvi.in