கரூர் மாவட்டத்தின் படிக்கும் 870 மாணவிகளுக்கு, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஏடிஎம் கார்டை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.


 




 



கரூர் மாவட்டத்தின் முதலாமாண்டு படிக்கும் 870 மாணவிகளுக்கு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூ. 1000ம் பெறுவதற்கான வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஏடிஎம்கார்டு ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார்.


தமிழக முதல்வர் திருவள்ளுவர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் புதுமைப் பெண் திட்டம் 2ன் இன் கீழ் முதலா மாண்டு படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1000 பெறுவதற்கான வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஏடிஎம்கார்டு வழங்கும் நிகழ்வை தொடர்ந்து, கரூர் மாவட்டத்தின் முதலாமாண்டு படிக்கும் 870 மாணவிகளுக்கு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூ. 1000 பெறுவதற்கான வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஏடிஎம்கார்டு ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார்.


 


 




 


பின்னர் அவர் பேசுகையில், “பெண்களின் கல்வி நிலையை உயர்த்துவதற்கான அடிப்படையாக கொண்டு. 10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் திருமணத்துக்கு என அவர்களின் பெற்றோர்களுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்கப்பட்டு வந்தது.


இந்த திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையாளர் உயர்கல்வி உறுதித் திட்டம் என பெயர் மாற்றம் பெற்று கடந் தாண்டு செப்டம்பர் 5ம் தேதி அன்று தமிழக முதல்வர் இரண்டாம் கட்டமாக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உதவித் திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது


பெண்களுக்கு உயர் கல்வி அளிப்பதன் மூலம் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளை கல்வி பயிலுவதில் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின் படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், உயர்கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி, பெண்களுக்கான தொழில் வாய்ப்பை அதிகரித்தல், பெண்கள் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் என இந்த திட்டம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்கிறது.


மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து இருக்க வேண்டும். மாணவிகள் முதன்முறையாக உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும். தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இந்த திட்டம் பொருந்தாது. தகுதியுடைய மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் முதல் பட்டப்படிப்பினை இரண்டாம் ஆண்டு முதல் படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் முதற்கட்டமாக வங்கி கணக்கில் ரூ. 1000 தமிழக முதல்வரால் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் துவங்கி வைக்கப்பட்டது.


 




 


மேலும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக பயன் பெறும் மாணவிகளுக்கு மூன்று மாதங்களுக்கு மொத்தம் 2246 மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000ம் வழங்கப்பட்டு வருகிறது.


மேலும், புதுமைப்பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக கல்லூரியில் சேர்ந்து இந்த ஆண்டு முதலாமாண்டு மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 1000ம் வழங்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து, புதுமைப்பெண் திட்டத்தில் புதிதாக இந் தாண்டு முதலாமாண்டு படிக்கும் 820 மாணவிகளுக்கு (தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு) ரூ.1000ம் பெறுவதற்கான வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஏடிஎம் கார்டு வழங்கப்படுகிறது” என்றார்.


இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாசன், முன்னோடி வங்கி மேலாளர் வசந்தகுமார், சமூக நல அலுவலர் சண்முகவடிவு கலந்து கொண்டனர்.