வாசனை மெழுகுவர்த்தி
நமது வீட்டையும், நம்முயை அறையையும் சுத்தமாகவும் வாசனையுடனும் வைத்திருப்பதை அனைவரும் விரும்பக் கூடிய ஒன்று. அதற்காக பலரும் பலவிதமான பொருட்களை வாங்கி நமது வீட்டை அலகரித்து கொள்வார்கள். செடிகள், அலங்கார பொருட்கள் என அனைத்தையும் சந்தையில் வாங்கி வீடு, அறை, சமயலறை என அனைத்து இடங்களிலும் அலகரித்து கொள்வார்கள். அந்த வகையில் சமீப காலமாக நறுமண மெழுகுவர்த்திகளை மக்கள் வாங்குகின்றனர். வாசனை மெழுகுவர்த்தியை அறையில் ஏற்றுவதால் அறையின் சுற்றுச் சூழல் நன்றாக இருப்பதாகவும், மனநிலையில் நல்ல மாறுதல்கள் ஏற்படுவதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்.
156 வகை வாசனை மெழுகுவர்த்திகள் சந்தைகளை விற்கப்படுவதாக கூறப்படுகிறது. அதன்படி, லாவண்டர், ரோஸ்மேரி, வெண்ணிலா, ஏலக்காய் உள்ளிட்ட வகைகளில் கூட மெழுகுவர்த்திகள் இருக்கிறது. தற்போது இவை பயன்பாட்டில் இருந்து வீட்டிற்கான அலங்காரத்தில் அத்தியாவசிய அங்கமாகிவிட்டது.
மேலும், வாசனை மெழுகுவர்த்திகளை நாம் அறையில் பல்வேறு இடங்களில் ஏற்றி வைக்க முடியும். அறையில் வாசனை மெழுகுவர்த்தி ஏற்றி வைத்திருக்கும்போது, அதை பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாகவும் அறைக்கு அழகு சேர்ப்பதாகவும் உள்ளது. வாசனை மெழுகுவர்த்தி ஏற்றுவதால் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், அவை நம் வீட்டில் வைத்து அதை சுவாசிப்பது நம் உடலுக்கு நல்லதா என்று ஒருமுறையாவது யோசனை செய்தோமா?
ஆம், தொடர்ந்து 3 அல்லது 4 மணி நேரம் எரியும் வாசனை மெழுகுவர்த்தியை சுவாசிப்பது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
"சிகரெட்டைப்போலவே நச்சுத்தன்மை வாய்ந்தவை”
இது குறித்து வெளிட்ட பல பதிவுகளின்படி, வாசனை மெகுகுவர்த்திகளை சுவாசிப்பது நமது உடலுக்கு தீங்கு விளைப்விப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலான மெழுகுவர்த்திகள் சிகரெட்டை போலவே நச்சுத்தன்மை வாய்ந்தவை என்று கூறப்படுகிறது. ஏனெனில் அவை புற்றுநோயை உண்டாக்கும். பாரஃபின் மெழுகில் குறைந்தது 20 சதவீத நச்சுகள் உள்ளன. இவை புற்றுநோயை ஏற்படுத்தவதோது, நுரையீரலில் எரிச்சலையும், மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகளை சேதப்படுத்தவதாக கூறப்படுகிறது.
விளைவுகள்
தலைவலி
மெழுகுவர்த்திகள், குறிப்பாக வாசனை மெழுவர்த்திகள் தலைவலியை ஏற்படுத்தும். ஏனென்றால் நாம் குறைந்தது 4 மணி நேரம் மெழுகுவர்த்தியின் புகையை சுவாசிப்பதால் தலைவலியை ஏற்படுத்துகிறது.
சுவாச பிரச்சனைகள்
சுவாச மண்டலத்தை எரிச்சலூட்டுவதோடு மட்டுமல்லாமல், மெழுகுவர்த்திகளில் உள்ள செயற்கை வாசனைகள் சுவாச பிரச்சனைகளை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. மெழுகுவர்த்திகளில் பாரஃபின் உள்ளது. இது ஆஸ்துமா போன்ற பல சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
புற்றுநோய் ஆபத்து
கரிம ரசாயனங்களான டோலுயீன் மற்றும் பென்சீன் போன்றவை புற்றுநோயை உண்டாக்கும் என்று ஆய்வு கூறுகிறது. இது மெழுகுவர்த்தியின் புகைகளில் இருந்து இந்த ரசாயனங்கள் வெளியேறுவதால் புற்றுநோய் அபாயத்தை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.
வாசனை மெழுகுவர்த்தியை யார் தவிர்க்க வேண்டும்?
நிபுணர்களின் கூற்றுப்படி, "சிறுநீர்ப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சுவாச பிரச்சனை உள்ளவர்கள், சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள், வயதானவர்கள் போன்றோர் வாசனை மெழுகுவர்த்தி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என்று கூறப்படுகிறது.
கவனத்தில் கொள்ளவேண்டியை:
மெழுகுவர்த்திகளை பயன்படுத்தும்போது அதிக தரமுடைய, இயற்கையான வாசனைகள் நிறைந்த மெழுவர்த்திகளை பயன்படுத்த வேண்டும். உடலுக்கு கெடு தரக்கூடிய வேதிப்பொருட்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இயற்கை வாசனை மெழுகுவர்த்திகள் அதாவது, பாராஃபின் இல்லாது மெழுகுவர்த்திகளை வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.