சுகாதாரம் & குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் PFMS/ITSA/IT தொடர்பான நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்கு முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் PFMS| நிபுணர்கள்/ கன்சல்டன்ட் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

பதவி: 

PFMS Experts Consultants

தகுதி: 

நல்ல அகாடமிக் ரிக்கார்டு உடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து MCA/BE/B.Tech (கம்ப்யூட்டர் சயின்ஸ் / என்ஜினீயரிங் அல்லது சமமான கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்)

அனுபவம்:PFMS/டெக்னாலஜி/பேமெண்ட் மற்றும் Banking issuesல் 3 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். 

 

மாத ஊதியம்: 

ரூ.60,000/ மாதம் 

பணிக்கான விரிவான விண்ணப்ப படிவம் மத்திய சுகாதார அமைச்சகத்தின் https://www.mohfw.gov.in/  என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.  இந்த விரிவான விண்ணப்ப படிவத்தை நிறைவு செய்து, உரிய சான்றிதழ்களுடன் (அசல் கல்வி சான்றிதழ் மற்றும் பணி சான்றிதழ்) உரிய வகையில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். (அல்லது) praoadmnmohfw@gov.in என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம். (பிடிஎஃப் வடிவில் இருக்க வேண்டும்) 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:

இந்திய அரசு 

பிரின்சிபால் அக்கவுண்ட்ஸ் ஆபிஸ் 

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 

313- D, நிர்மான் பவன், புதுடெல்லி 

(டெலி/பேக்ஸ்  - 011- 2306-1432/3660       

விண்ணப்ப படிவங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவுரைகளும் வலைதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. 

கடைசி தேதி: 

எம்ப்ளாமென்ட் நியூஸ்/ ரோஜ்க்கர் சமாச்சார் மற்றும் மற்ற முன்னணி செய்தித் தாள்களில் இந்த விளம்பரம் பிரசுரிக்கப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்கு (2022, ஜனவரி 3ம் தேதிக்குள்) அனுப்பி வைக்க வேண்டும். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண 

மேலும், வாசிக்க:

BCCI Announcement: இந்தியா-தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு: பிசிசிஐ அறிவிப்பு!

‛தன் இருப்பை காட்டுகிறார் ஜோதிமணி’ - விளாசிய அமைச்சர் செந்தில் பாலாஜி! 

முன்னாள் தமிழ்நாடு ஆளுநர் ரோசய்யா காலமானார்: ஐதராபாத்தில் உயிர் பிரிந்தது!