கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கல்குளம் அரசு மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் 84.25 லட்சம் மதிப்பில்  புதிய தொடக்க பள்ளி வகுப்பறை கட்டும் அடிக்கல் நாட்டு விழாவை புறக்கணித்து சென்ற அமைச்சர் மனோதங்கராஜ்.மாணவ மாணவிகள் சென்று வர போதிய இட வசதி இன்றி கட்டுமானம் கட்ட பிளான் போட்டதாக கூறி பொறியாளர் மற்றும் ஆசிரியர் இடம் வாக்குவாதம்.




கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ-84.25.லட்சத்தில் கல்குளம் அரசு தொடக்கப்பள்ளியில் 5-புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியை தொடங்கி வைப்பதற்காக வருகை தந்த அமைச்சர் மனோ தங்கராஜ் சாலை பணிகளை தொடங்கி வைத்த பின்னர் கல்குளம் அரசு பள்ளியில் கட்டிட பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க பள்ளிக்கு வருகை தந்தார்.





பள்ளியில் 5-வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்காக இடம் ஒதுக்கப்பட்டு வரை படம் போடப்பட்ட பகுதியை பார்வையிட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் பள்ளிக்கு குழந்தைகள் வரும் வாசலை அடைத்தும் அடுத்த கட்டிடங்களையும் மறைத்து மற்றொரு பள்ளி கட்டிடம் கட்டுவதா? என பொறியாளர் ஜெனி இடம் கேள்வி எழுப்பினார்.




குறுக்கிட்ட தலைமை ஆசிரியர் சார் முன்னாடி இதுலதான் இருந்தது ஸ்கூல் சார் என்று கூறியவுடன் கோபமடைந்த அமைச்சர், அம்மா உங்களிடம் நான் கேட்கல ஏன்னா வாத்தியாமாருக்க லட்சணம் தெரியும் உங்க சொந்த வீடுனா இப்படி கட்டீவீங்களா என்று கூறியதோடு, ஸ்கூல் கட்டிடங்கள் காற்றோட்டமாக அமைய வேண்டும் என்றும் திரும்ப பிளான் பண்ணுங்கள் என்று காட்டமாக கூறி அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை ரத்து செய்து அங்கிருந்து திரும்பி சென்றார். அமைச்சரின் கடுமையான வார்த்தைகளால் கைகளை பிசைந்து கொண்டு நின்ற அதிகாரிகளால் மேற்கொண்டு எதுவும் கேள்வி எழுப்ப முடியாமல் தவித்து நின்றனர்.