திருச்சி மாவட்டத்தில் 2023-ம் ஆண்டிற்கான மருத்துவ தகுதி தேர்வில் (நீட்) 110 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றார்கள். அவர்களில் 9 மாணவிகள் உள்பட 13 அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த மாணவ-மாணவிகள் கலந்தாய்வு மூலம் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பை படிப்பதற்கு கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவக்கல்லூரிகளை தற்போது தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் ஸ்ரீதர் (முசிறி), அவனித் (உப்பிலியபுரம்) ஆகியோருக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியிலும், சந்திரன் (டாப் செங்காட்டுப்பட்டி), நித்தீஷ் (திருச்சி மாநகராட்சி பள்ளி) ஆகியோருக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியிலும் படிக்க இடம் கிடைத்துள்ளது. இதுபோல் மாணவிகள் தேவதர்சினி (துறையூர்) விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரியையும், தீபிகா (துறையூர்) திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியையும், அக்ஷயா (துறையூர்) தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரியையும், ஜமுனா (வாளையூர்) கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியையும் தேர்வு செய்துள்ளனர்.

 



 

திருச்சி மாநகராட்சி பள்ளி மாணவி ரக்ஷிதா கோவை பி.எஸ்.சி. மருத்துவக்கல்லூரியையும், மாணவிகள் குணவதி (தண்டலைபுத்தூர்), ரோகிணி (மண்ணச்சநல்லூர்) ஆகியோர் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரியையும், திருச்சி மாநகராட்சி பள்ளி மாணவி சிந்துஜா திருச்சி தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரியையும், ஓவியா (கண்ணணூர்) கிருஷ்ணகிரி செயிண்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரியையும் தேர்வு செய்துள்ளனர். இதில் 3 பேர் திருச்சி மாநகராட்சி பள்ளியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவ-மாணவிகளை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சிவக்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண