தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வழங்கப்பட உள்ள இலவச புத்தாக்க பொறியாளர் பயிற்சிக்கு மயிலாடுதுறை மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்;
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்காக பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில், இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு "புத்தாக்க பொறியாளர் பயிற்சி" (Innovation Fellowship Program) வழங்கப்பட உள்ளது.
Aadhav Arjuna : “அய்யோ விட்ருங்க – ஆதவை விட்டு விலகும் நபர்கள்” TVK-யில் நடப்பது என்ன..?
பயிற்சியின் சிறப்பம்சங்கள்
இந்தப் பயிற்சியின்போது கணினி பொறியியல் (System Engineering), மின்னணு வடிவமைப்பு (Electronics System Design), உற்பத்தி (Manufacturing), தானியங்கி தொழில்துறை (Industrial Automation), இயந்திரவியல் (Robotics) மற்றும் சேர்க்கை உற்பத்தி (Additive Manufacturing) போன்ற முக்கிய துறைகளில் அறிவுத் திறன் மேம்படுத்தப்படுகிறது. பயிற்சி நிறைவடைந்த பின், பயிற்சியில் தேர்ச்சி பெறும் இளைஞர்கள் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.
தமிழக அரசில் வேலை, 8,997 பணியிடங்கள்- இவர்களுக்கும் இனி வாய்ப்பு; ஊதியத்திலும் மாற்றம்- இதோ விவரம்!
கடைசி ஆண்டு பயிற்சி பெற்றவர்கள்
2023 ஆம் ஆண்டு பயிற்சி முடித்த 28 இளைஞர்கள் Thermofisher Scientific, Ashok Leyland, G Care India, TCS உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் Mechanical R&D, Graduate Engineer Trainee, R&D Business Development போன்ற பதவிகளில் பணியாற்றி வருகின்றனர்.
பயிற்சிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
- 2022, 2023, 2024 ஆம் கல்வியாண்டுகளில் ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
- வயது: 21 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் ₹3,00,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை & பயிற்சி விவரங்கள்:
- தகுதியுள்ளவர்கள் www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
- பயிற்சிக்கான கால அளவு: 18 வாரங்கள்.
- பயிற்சி நடைபெறும் இடங்கள்: கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சி, சேலம், ஓசூர், ஸ்ரீபெரும்புதூர்.
- தங்கும் வசதி வழங்கப்படும்.
- பயிற்சி முடித்த பின் குறைந்தபட்சம் மாத ஊதியம் ₹20,000/- கிடைக்கும்.
- பயிற்சிக்கான கட்டணம் முழுவதுமாக தாட்கோ ஏற்கும்.
NTK - TVK Alliance? : “நீரடித்து நீர் விலகாது” சீமானை கூட்டணிக்கு அழைக்கிறாரா விஜய்..?
மேலும் தகவல்களுக்கு:
தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (6-வது தளம்), தொலைபேசி: 04364-211217 / 7448828509 நேரில் அல்லது தொலைபேசி வாயிலாக விபரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
மேலும் மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ள இளைஞர்கள் முன்வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.