மதுரை: சக மாணவிகளுக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்து வரவேற்ற மாற்றுத்திறனாளி மாணவி்யின் செயல் நிகழ்ச்சியை ஏற்படுத்தியது.


தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 29ம் தேதி கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஜூன் 1 ல் 6 முதல் 12 ம் வகுப்புகளுக்கும், ஜூன் 5 ம் தேதி முதல் 1 முதல் 5 வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என முன்னதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், வெப்பத்தின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு ஜூன் 7 ம் தேதி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கத்திரி வெயில் தாக்கம் குறையாததால் 2வது முறையாக பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி, 6 முதல் 12 ம் வகுப்புகளுக்கு இன்றும், 1 முதல் 5 வகுப்புகளுக்கு 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 




மதுரை மாவட்டத்திலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை முதலே ஏராளமான  மாணவ மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக வருகை தந்தனர். மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை முதல் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்த  மாணவிகள் தங்களது நண்பர்களை பார்த்து மகிழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு வருகை தந்த மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியைகள் கைகளில் பூக்கள் கொடுத்தும் கற்கண்டுகள் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் சிறப்பாக பள்ளி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பரிசு கோப்பைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.




இந்த மாநகராட்சி பள்ளியில் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவியான நாக கீர்த்திகா என்ற மாற்றுத்திறனாளி மாணவி, தேர்ச்சிபெற்று 12 வகுப்புக்கு வந்த நிலையில் புதிதாக தனது பள்ளிக்கு வருகை தந்த மாணவிகளுக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து நன்றாக படிக்க வேண்டும், கல்விக்கு எதுவும் தடையில்லை என அறிவுரை வழங்கி வாழ்த்து தெரிவித்து வரவேற்றார். இதனைத் தொடர்ந்து முன்னதாக பள்ளிக்கு வருகை தந்த மாற்றுத்திறனாளி மாணவி நாக கீர்த்திகாவை ஆசிரியைகள் கை கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். பள்ளி திறக்கப்பட்டதையடுத்து பள்ளியில் தேவையான குடிநீர் கழிப்பறை கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழுவினர் ஒவ்வொரு பள்ளிகளிலும் நேரடியாக ஆய்வுகள் மேற்கொண்டனர்.




கோடை வெயிலின் தாக்கம் மதுரையில் தற்போதும் அதிகரித்து வரக்கூடிய நிலையில் குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதற்கும் மின்சாரம் தடை இன்றி கிடைப்பதற்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு அதனை கண்காணித்து வருகின்றனர். பள்ளிக்கு புதிதாக சேர்க்கையில் சேர்ந்து வருகை தந்த மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் பள்ளிக்கு அழைத்துவந்தனர். இதேபோன்று மதுரை மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இன்று காலை முதல் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு உற்சாகமாக வருகை தந்தனர். மதுரை புறநகர் பகுதிகளில் சில பள்ளிகளின் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதால் அதனை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. பள்ளி மறு திறப்பு செய்யப்பட்ட நிலையில் பள்ளிக்கு வந்த மாற்றுத்திறனாளி மாணவி நாக கீர்த்திகா பேசிய பொழுது, ”11ஆம் வகுப்பு படித்து தற்பொழுது 12ஆம் வகுப்பிற்காக பள்ளிக்கு வருகை தந்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது. மாற்றுத்திறனாளிக்கான மாணவி தான் நன்கு படித்து தனது கல்வியை அனைவருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஆசிரியராக பணி செய்ய வேண்டும் என்பதை எனது லட்சியம். அனைத்து மாணவ,மாணவிகளும் நல்ல முறையில் படிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்










ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண