மத்திய பிரதேசம் பர்வானி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இருந்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 85 மாணவர்களும் ஃபெயில் ஆன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சமீபத்தில் மத்திய பிரதேச பள்ளிக்கல்வித்துறை 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிட்டது. இதில், ஒரு சில மாவட்டங்கள் பள்ளி மாணவர்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும், ஒரு சில பள்ளிகளின் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியா முழுவதும் செயல்படும் தனியார் பள்ளிகள் தங்களது பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சியை வழங்க, சம்மர் கிளாஸ், ஸ்பெஷல் கிளாஸ், டியூசன் என பல்வேறு வகுப்புகளை நடத்தி மாணவ, மாணவிகளை தேர்ச்சி பெற வைக்கின்றனர். இது பள்ளி படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்திற்கு முக்கியம் என்றாலும், பள்ளிகள் எப்படியாவது தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்றும் அதிகளவிலான அழுத்ததை கொடுத்து வருகின்றனர். 


இப்படி ஒருபுறம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், மத்தியப் பிரதேச மாநிலம், பர்வானி மாவட்டத்தில் உள்ள கெதியாவில் இடைநிலை கல்வி வாரியத்தின் 12ம் வகுப்பை சேர்ந்த 85 குழந்தைகள் தேர்வெழுதிய ஒரு அரசுப் பள்ளியில் உள்ளது. இதில், இந்த மாணவர்களில் யாருமே தேர்ச்சி பெறவில்லை என்பதே அதிர்ச்சியாக உள்ளது. 


அரசு பள்ளி ஆசிரியர்கள் அடிக்கடி கல்வி வழங்குவதில்லை என்று குற்றம் சாட்டப்பட்டாலும், பர்வானி மாவட்டத்தின் கெதியா பிளாக்கிற்கு அருகில் உள்ள மால்ஃபா என்ற கிராமத்தில் 12 ஆம் வகுப்பு படித்த 89 மாணவர்களில் 85 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். டெம்லா கிராமத்தில் அமைந்துள்ள தேர்வு மையத்தில்தான் இந்த இரண்டு பள்ளி மாணவர்களும் தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும், அதே பகுதியில் உள்ள மற்றொரு பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 75 பேரில் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டு, அப்பள்ளியில் உள்ள ஆசிரியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ஆசிரியர் பற்றாக்குறையால் வணிகவியல் பிரிவு ஆசிரியரே மாணவர்களுக்கு கணிதப் பாடம் கற்பித்தது தெரிய வந்துள்ளது. 


இதனால், மாணவர்களின் பெற்றொர்களும், கிராம மக்களும் கோபமடைந்து, இதில் ஏதோ முறைகேடுகள் இருப்பதாக தெரிவித்து, ஒட்டுமொத்த ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி வருகின்றனர். மேலும், தொடர்ந்து ஆத்திரமடைந்த பெற்றோர்கள், பள்ளியில் பாடம் நடத்தப்படவில்லை என்றும், ஆசிரியர்கள் கல்வி கற்று தரவில்லை என்றும் குற்றம் சாட்டி வருகின்றன. 


இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “ அனைவரும் பெயில் என்று வெளியான தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து, இது ஏன் நடந்தது என்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். அதேசமயம், நானும் ஒவ்வொரு குழந்தையையும் ஒருவரையொருவர் சந்தித்து இதுபற்றி பேசி வருகிறேன். இந்த குழந்தைகளில் பலர் முன்பு நடந்த 75% மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் எப்படி தோல்வி அடைந்தார்கள் என்பது தெரியவில்லை.” என்று தெரிவித்தார்.