Siragadikka Aasai Promo :சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வார ப்ரோமோ. 


ஜீவா தன் வழக்கறிஞரிடம் ”இவங்க கிட்ட இருந்து தப்பிக்க எனக்கு ஒரு வழி சொல்லுங்க சார்” என்று கேட்கிறார்.” ஒரே வழி நீங்க காம்ரமைஸ்ஸா போகுறது தான்” என்று அவர் சொல்கிறார். பின் ஜீவா தான் கொடுக்க வேண்டிய பணத்தை மனோஜிக்கு ட்ரான்ஸ்பர் செய்கிறார். மனோஜுக்கு ரோகிணி சாட்சி கையெழுத்து போடுகிறார். ”உன் பாக்கம் சாட்சி கையெழுத்து போட யாருமா இருக்காங்க” என்று போலீஸ் கேட்கிறார்.” என் லாயர் இருக்காரு சார்” என்று ஜீவா சொல்கிறார்.


”வேற யாரும் இல்லையா?” என போலீஸ் கேட்கிறார். ஜீவாவுக்கு சாட்சி கையெழுத்து போட யாரும் இல்லை. அப்போது ஜீவா வெளியே வரும் போது முத்து அங்கே இருக்கிறார். முத்துவிடம் உதவி கேட்டதும் அவர் சாட்சி கையெழுத்து போடுகிறார். பின் அண்ணாமலை குடும்பத்துடன் சாப்பிட்டு கொண்டிருக்கிறார். ”வேலை இல்லாம என்ன செய்யுறதுனே தெரியாம இருந்தேன். இப்போ என் பேருல 15 லட்சம் ரூபா பணம் வந்து இருக்கு” என்று மனோஜ் சொல்கிறார். அதற்கு முத்து ”என்னது உன் பேர்ல வந்து இருக்கா? பார்லர் அம்மாவோட அப்பா, அவங்களுக்கு பணம் அனுப்பாம எதுக்கு இவனுக்கு அனுப்புறாரு” என்று முத்து கேட்கிறார். உடனே ரோகிணியும், மனோஜிம் திரு திருவென விழிக்கின்றனர். இத்துடன் ப்ரோமோ நிறைவடைகிறது. 


சிறகடிக்க ஆசை சீரியலின் கடந்த வார எபிசோடில் ஜீவாவை மனோஜும், ரோகிணியும் தீவிரமாக தேடிக் கொண்டிருந்தனர். அந்நேரம் பார்த்து ஜீவாவும் கனடாவில் இருந்து சென்னை வந்தார். பின் எதிர்பாராத விதமாக, தன் கஸ்டமரான ஜீவாவை முத்து  ஃபேசியல் செய்வதற்காக ரோகிணியின் பார்லருக்கு அழைத்துச் சென்றார்.


அப்போது ரோகிணி ஜீவாவை அடையாளம் கண்டு மனோஜிக்கு கால் செய்து தகவல் அளித்தார். இதனையடுத்து மனோஜ் சம்பவ இடத்திற்கு வந்து போலீசுக்கு தகவல் அளித்தார். பின் போலீசார் அங்கு வந்து ஜீவாவை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். 


மேலும் படிக்க 


Mohan G: எந்த சாதியா இருந்தாலும், பெத்தவங்க ஒத்துக்கணும்.. காதல் திருமணம் பற்றி இயக்குநர் மோகன் ஜி..


HBD Samantha : நோயும், தோல்விகளும் புரட்டினால் என்ன? நீங்க சிங்கம்தான்.. ஹேப்பி பர்த்டே சமந்தா..