அரசு கல்வியியல்‌ கல்லூரிகளில்‌ எம்‌.எட்‌. (M.Ed.) மாணாக்கர்‌ சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்‌ பதிவு இன்று (11.08.2025) முதல்‌ தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உயர்கல்வித்‌ துறை அமைச்சர்‌ கோவி. செழியன்‌ தெரிவித்துள்ளார். 

இன்று தொடங்கிய விண்ணப்பப் பதிவு

2025-26ஆம்‌ கல்வியாண்டிற்கான அரசு கல்வியியல்‌ கல்லூரிகளில்‌ எம்‌.எட்‌ மாணாக்கர்‌ சேர்க்கைகான இணையதள விண்ணப்பப்‌ பதிவு இன்று (11.08.2025) தொடங்கி 20.08.2025 வரை நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில்‌ எம்‌.எட்‌. பாடப்பிரிவுகள்‌ கொண்டுள்ள 6 அரசு கல்வியியல்‌ கல்லூரிகளில்‌ 300 இடங்கள்‌ உள்ளன. இந்த இடங்களுக்கு 2025-26ஆம்‌ கல்வியாண்டில்‌ மாணாக்கர்கள்‌ சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்‌ இன்று  (11.08.2025) முதல்‌ இணையவழியில்‌ தொடங்கி உள்ளன.

ஆகஸ்ட் 20 கடைசி

மாணாக்கர்கள்‌ https://www.tngasa.in/ என்ற இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பப்‌ பதிவினை மேற்கொள்ளலாம்‌. மேற்படி இணையதள முகவரியில்‌ 20.08.2025 வரை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்‌டு உள்ளது.

தரவரிசைப் பட்டியல் எப்போது?

பின்னர்‌, இதற்கான தரவரிசைப்‌ பட்டியல்‌ 25.08.2025 அன்று வெளியிடப்படும்‌. மாணாக்கர்‌ சேர்க்கை 26.08.2025 முதல்‌ 29.08.2025 வரை நடைபெறும்‌. மேலும்‌, முதலாம்‌ ஆண்டு வகுப்புகள்‌ 01.09.2025 அன்று முதல்‌ துவங்க உள்ளன.

விண்ணப்பிப்பது எப்படி?

https://med.tngasa.in/user/register என்ற இணைப்பை பயன்படுத்தி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்‌ துறை அமைச்சர்‌ கோவி செழியன் தெரிவித்துள்ளார். 

கூடுதல் தகவல்களுக்கு: https://med.tngasa.in/

தொலைபேசி எண்கள்: 044 - 24343106, 044 - 24342911

இ மெயில் முகவரி: tngasa2025@gmail.com