இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக டாடா உள்ளது. பாதுகாப்பு அம்சத்தில் மற்ற கார்களை காட்டிலும் மிகவும் நம்பகத்தன்மைக்குரிய காராக டாடாவின் தயாரிப்புகள் மற்ற கார்களை காட்டிலும் முன்னணியில் உள்ளது. மேலும், பல்வேறு சிறப்பம்சங்களும் இருப்பதால் டாடா கார்களுக்கு சந்தையில் தனி வரவேற்பு உள்ளது. 

விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் டாடா இந்த ஆகஸ்ட் மாதத்தில் தனது பல்வேறு மாடல் கார்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன் விவரத்தை கீழே காணலாம்.

எந்த காருக்கு எவ்வளவு சலுகை?

1. Tiago -  ரூபாய் 55 ஆயிரம் ( அதிகபட்சமாக)

2. Tigor - ரூபாய் 60 ஆயிரம் ( அதிகபட்சமாக)

3. Pre-Facelift Altroz - ரூபாய் 85 ஆயிரம் ( அதிகபட்சமாக)

4. Punch Petrol - ரூபாய் 65 ஆயிரம் ( அதிகபட்சமாக)

5. Punch CNG - ரூபாய் 85 ஆயிரம் ( அதிகபட்சமாக)

6. Nexon - ரூபாய் 50 ஆயிரம் ( அதிகபட்சமாக)

7.   Curvv - ரூபாய் 30 ஆயிரம் ( அதிகபட்சமாக)

8. Harrier - ரூபாய் 1.05 லட்சம் ( அதிகபட்சமாக)

9. New Harrier - ரூபாய் 1 லட்சம் ( அதிகபட்சமாக)

10. Safari - ரூபாய் 1.05 லட்சம் ( அதிகபட்சமாக)

11. New Safari - ரூபாய் 1 லட்சம் ( அதிகபட்சமாக)

டாடா நிறுவனம் தள்ளுபடி அறிவித்துள்ள இந்த 11 கார்களும் சந்தையில் நன்றாக விற்பனையாகி வரும் கார்கள் ஆகும். குறிப்பாக, டியாகோ, நெக்சான், கர்வ், பஞ்ச் கார்கள் தொடர்ந்து நன்றாக விற்பனையாகி வருகிறது. 

அதிகபட்சமாக டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய இரண்டு கார்களுக்கும் ரூபாய் 1.05 லட்சம் வரை தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக டாடா கர்வ் ரூபாய் 30 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளனர். டாடா பஞ்ச் சின்ஜி காருக்கு ரூபாய் 85 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளனர்.

டாடா ஹாரியர், டாடா சஃபாரி:

டாடாவின் இந்த அதிரடி சலுகை அறிவிப்பால் இந்த மாதம் டாடா-வின் விற்பனை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. டாடாவின் போட்டி நிறுவனமான ஹுண்டாய் நிறுவனம் ரூபாய் 4 லட்சம் வரை தங்கள் மாடல் கார்களுக்கு சலுகை அறிவித்துள்ள நிலையில், டாடாவும் அதன் மின்சார மற்றும் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி இந்த மாத இறுதி வரை மட்டுமே செல்லும்.

டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி காரின் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கத்தில் அந்த இரண்டு கார்களுக்கு மட்டும் அதிகளவு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது டாடா ஹாரியர் பயன்படுத்தும் வாடிக்கைாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், டாடாவின் இந்த சலுகையால் ஹாரியரின் விற்பனை சூடுபிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI