தர்மபுரி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தேசிய கல்வி கொள்கை 2020 அமலாக்கத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி 28.07.2023 அன்று  நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கேந்திரிய வித்யாலயா முதல்வர் இ.ஜெயச்சந்திரன் தேசிய கல்வி கொள்கை  மற்றும் அதன் பயன்கள் பற்றி விரிவாக பவர் பாயிண்ட் காட்சியின் வழியாக உறையாற்றினார்.

 

தற்போது நாடு முழுவதும் 1250 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் வெளிநாடுகளில் மூன்று பள்ளிகள் என மொத்தம் 1253 கேந்திரிய வித்யாலயாக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றன. கடந்த 2022-23  கல்வியாண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு சேர்க்கை வயது 6 ஆக மாற்றியமைக்கப்பட்டது. அடித்தள நிலைகள் பால்வாட்டிகா, முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகள் 5 ஆண்டுகள் ஆகும். 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆயத்த நிலை முன்று வருடமாகவும், 6 வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மூன்று வருடமாகவும், 9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நான்கு வருடம் என 12 வருடங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.

 

நமது கேந்திரிய வித்யாலயா தர்மபுரியில் மாணவர்களுக்கு புதிய தேசிய கல்வி கொள்கையின் படி 

அடிப்படை எழுத்தறிவு எண்ணறிவு ( எப் எல் என் )
  

நிபுன் பாரத் திட்டம் 

வித்யாஞ்சலி

திறன் மேம்பாடு முன்முயற்சி, அடல் ஆய்வகம் திறன் பொருள் & செயற்கை நுண்ணறிவு.

மாணவர்களுக்கு மின் உள்ளடக்கத்தை வழங்க டிக்ஷா போர்டல்

கற்பவர் சாதனைத் தேர்வு ( எல் ஏ டி )

வகுப்பு 1 க்கான வித்யா பிரவேஷ் மற்றும் பால் வாடிகா -3

 

போன்ற திட்டங்கள் கல்வி மேம்பாட்டுக்காக பின்பற்றப்படுகிறது. மேலும், பள்ளி ஆசிரியர்களின் திறமை மேம்பாட்டுக்காக NISTHA  50 மணி நேர பயிற்சி கொடுக்கப்படுகிறது. புதிய பாட திட்டத்தை திறம்பட செயல்படுத்த தேவையான அறிவு சார்ந்த பயிற்சி பட்டறைகள் நடத்தப்படுகிறது. மத்திய அரசின் புதிய கல்வி  கொள்கையின்படி மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும் என்று பள்ளி முதல்வர் தெரிவித்தார்.

 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண