கரூரில் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணியில் 400க்கும் மேலான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


 




 


கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் 2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்காக பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 


 




ராயனூர் பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியானது முக்கிய வீதிகள் வழியாக, ராயனூர் கடைவீதி வழியாக மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் தேன்மொழி தலைமையில் நடைபெற்ற பேரணியில் 450 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையின் முக்கியத்துவம் மற்றும் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். 


 




இப்பள்ளியில் 1 முதல் எட்டாம் வகுப்புகளுக்கு 2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண