வருகின்ற சித்திரை 1ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இந்த ஆண்டுக்கான ராசிபலன் குறித்த முழு பலன்களை பிரபல ஜோதிடர் கஜகேசரி டாக்டர் ஆச்சார்ய ஹரேஷ்ராமன் கணித்துள்ளார். அவர் கணித்துள்ள பலன்களை கீழே விரிவாக காணலாம்.


ரிஷப ராசி:


இந்தாண்டு உங்களுக்கு என்ன பண்ண போகிறது என்றால், ரிஷப ராசியில் இருந்து 12ம் இடத்தில் உள்ளது. இது செவ்வாய் உடைய வீடு. இங்கு குரு மற்றும் ராகுவின் சஞ்சாரம் ஏற்படுவதாலே, தேவைக்கு அதிகமாக வீடு, வண்டி, சொத்துகள் மற்றும் சுகங்களுக்காக இன்வெஸ்ட் பண்ணுவீங்க. குரு மற்றும் ராகு இருப்பதால் மிக பிரமாண்டமாக கட்ட கூடிய வாய்ப்பு ஏற்பட்டு, கடன் வாங்க கூடிய சூழ்நிலை ஏற்படும். உங்களுடைய ராசி அல்லது லக்கணத்தில் இருந்து 10 வது இடத்தில் சனியுடைய தொடர்பு இருக்கிறது. இருப்பினும், கால பூஷனின் 11 வது இடத்தில் இருப்பதால் தொழில் மூலமாக லாபம் மற்றும் புரோமோஷன் ஏற்பட கூடிய வாய்ப்பு இருக்கிறது. தொழில் விருத்தி செய்யக்கூடிய வாய்ப்புகள், லோன் தரக்கூடிய வாய்ப்புகள், போட்டி தேர்வுகளில் வெற்றிபெற கூடிய வாய்ப்புகள், ஐஏஎஸ், ஐபிஎஸ், சிவில் தேர்வுகளில் பிளேஸ் ஆகி நல்ல பொசிசஷனில் உட்கார கூடிய வாய்ப்புகள் அமையலாம். 


மூத்தவர்களின் தொழிலை எடுத்து நடத்தக்கூடிய வாய்ப்புகள், அப்பா மற்றும் மூதாதையர்களின் சொத்து வருவது, நிறைய பேர் டைவர்ஸ் அப்ளை பண்ணியிருந்தால் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இரண்டாம் திருமணம் செய்துகொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த ஆண்டு ஆரம்பத்தில் இரண்டாம் இடத்தில் இருக்கும் செவ்வாயால், பேச்சில் பிரமாண்டமான ஒரு வெற்றி உண்டு. பணப்புழக்கம் அதிகரித்தும், வண்டி வாகனங்கள் புதிதாக வாங்க கூடிய யோகம் ஏற்படும். உங்களுடைய சகோதரன், சகோதரிகள் வாழ்க்கையில் நிறைய நல்ல விஷயங்கள் ஏற்படும். ஒரு புதுப்பெண்மணி உங்க லைப்ல வருவாங்க.. காதல் வாழ்க்கை களைகட்டும். 


புது ஆளு ஒருத்தவங்க உங்க லைப்ல வருவாங்க, அதனால மகிழ்ச்சி, சந்தோஷம் ஏற்படும். கணினி சார்ந்து வேலை பார்க்கும் நபர்களுக்கு இந்தாண்டு சிறப்பாக இருக்கும். சினிமா மற்றும் கலை சார்ந்து இருக்கும் நபர்களுக்கு யோகம் உண்டு. முழுக்க முழுக்க இந்தாண்டும் உங்கள் கையில் காசு பெருகும். உடைமைகள் மற்றும் தலை சார்ந்த விஷயங்களில் பாதிப்பு ஏற்படக்கூடும். கவனமாக இருப்பதாக நல்லது. 


கிருத்திகை நட்சத்திர காரர்கள் கொஞ்சம் கவனமுடன் இருப்பது நல்லது. ரோகிணி நட்சத்திர காரர்களுக்கும், ரிஷிக ரிஷி காரர்களுக்கும் அமோகமாக அருமையான பலன்கள் காத்திருக்கு.  பெண்கள்தான் இருப்பதிலேயே மகிழ்ச்சியாக இருக்க கூடிய ஆண்டாக இது அமையும். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான் காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலுக்கு சென்று பசு நெய் தானம் செய்து வந்தால்,  இந்தாண்டும் சுபிட்சமாக இருக்கும்.